ஸ்டீவன் ஸ்மித் அதிரடி! ஆஸ்திரேலிய அணி 286 ரன்கள் குவிப்பு

ஸ்டீவன் ஸ்மித் அதிரடி! ஆஸ்திரேலிய அணி 286 ரன்கள் குவிப்பு
கோலி
  • Share this:
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது.

உலக அரங்கில் வலுமிக்க அணியாக கருதப்படும் ஆஸ்திரேலியா மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இன்று நடைபெற்றுவரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 3 ரன்களிலும், ஆரோன் ஃபின்ஞ்ச் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டிவன் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சாங்நி இணை அணியை சரிவிலிருந்து மீட்டனர். மார்னஸ் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய ஸ்டிவன் ஸ்மித் 131 ரன்கள் குவித்து சமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆட்டநேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்துள்ளது.


Also see:

First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்