தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின்போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மீதம் உள்ள நாட்களில் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இன்றைய ஆட்டத்தின்போது அணியின் முக்கிய பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிற்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. லாங் ஆன் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, கேட்ச்சை பாய்ந்து பிடிக்க ஸ்டார்க் முயன்றார்.
அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதன்பின்னர் களத்தை விட்டு வெளியேறிய ஸ்டார்க்கிற்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. 30 நிமிட ஓய்வுக்கு பின்னர் ஸ்டார்க் மீண்டும் மைதானத்திற்கு வந்தார். அப்போது அவரது விரல்களில் டேப் சுற்றப்பட்டிருந்தது. இருப்பினும், காயத்திற்கு பின்னர் அவர் பந்து வீச கேப்டன் அனுமதிக்கவில்லை. விரல்களில் ஏற்பட்ட காயம் காரணமாக மிட்ச்செல் ஸ்டார்க் ஸ்கேனிங்கிற்கு சென்றுள்ளார். இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் அவர் மீதம் உள்ள ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது முடிவு செய்யப்படும்.
IPL 2023 : ஹர்திக் பாண்ட்யா, கேன் வில்லியம்சன் பேட்டிங் அப்டேட்டை வெளியிட்ட பயிற்சியாளர் நெஹ்ரா
ஆஸ்திரேலிய அணியில் முன்னணி பந்து வீச்சாளராக இருக்கும் ஸ்டார்க்கிற்கு ஏற்பட்ட காயத்தால் அணி பின்னடைவை சந்திக்குமா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணி 2ஆவது டெஸ்டிலும் தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீன் 27 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முதல் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களை மட்டுமே எடுத்தது.
அடுத்து பேட்டிங் செய்யத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் 32 ரன்களுடனும், மார்னஸ் லபுஸ்சேன் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket