ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு..! இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்கள்

INDvsAUS

 • Share this:
  இந்தியாவிற்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  ராஜ்கோட்டில் நடைபெறும் 2வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக 2வது போட்டியில் ரிஷப் பந்த் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கீப்பிங் செய்வார். ரிஷப் பந்துக்கு பதிலாக அணியில் மனிஷ் பாண்டே அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும் தாகூருக்கு பதிலாக நவ்தீப் சைனி அணியில் இடம் பெற்றுள்ளார். அதே வேளையில் ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

  ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. முதல் போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பிய இந்திய அணி முழுதிறனையும் இந்த போட்டியில் வெளிப்படுத்த வேண்டும். இன்றையப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும்.

  அதே சமயம் 2வது போட்டியில் வெற்றிப் பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளதால் இன்றையப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
  Published by:Vijay R
  First published: