Ind vs Aus | ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து நிதான ஆட்டம்

Ind vs Aus | ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து நிதான ஆட்டம்

India vs Australia

India vs Australia | மெல்போர்ன் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணியில் 7 பேட்ஸ்மேன்கள் இடம்பிடித்துள்ளனர்.

  • Last Updated :
  • Share this:
இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து நிதானமாக விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா இரண்டு இன்னிங்ஸ்களிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் இருவரையும் அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தன.

இதனிடையே முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் பந்துவீச்சில், கை மணிக்கட்டில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, டெஸ்ட் தொடரிலிருந்தே விலகினார். அதுமட்டுமின்றி, தனது மனைவி அனுஷ்காவிற்கு முதல் குழந்தை பிறப்பதையடுத்து, கேப்டன் கோலியும் நாடு திரும்பியுள்ளார். இந்தநிலையில், சனிக்கிழமை தொடங்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கான 11 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, பிரித்வி ஷாவுக்கு பதிலாக ஷுப்மன் கில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார். விக்கெட் கீப்பர் சாஹாவுக்கு பதிலாக ரிஷப் பந்த்-தும், ரவீந்திர ஜடேஜாவும் அணியில் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக வெளியேறியுள்ள முகமது ஷமிக்கு பதிலாக முகமது சிராஜ் அறிமுகப் போட்டியில் களம் காணவுள்ளார். ரஹானே கேப்டனாகவும், புஜாரா துணை கேப்டனாகவும் அணியை வழிநடத்துகின்றனர். இதுதவிர மயங்க் அகர்வால், ஹனும விஹாரி, உமேஷ் யாதவ், பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

மெல்போர்ன் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணியில் கில், அகர்வால், விஹாரி, ரஹானே, ரிஷப் பந்த், ஜடேஜா, புஜாரா என 7 பேட்ஸ்மேன்கள் இடம்பிடித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் எதுவும் இல்லை என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய  அணி பொறுமையாக விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். அவருக்க அடுத்த வந்த மார்னஸ் லாபுசாக்னே, மற்றொரு தொடக்க வீரர் மேத்யூவ் வேட் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகிறார். ஆஸ்திரேலிய அணி 26 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

 
Published by:Vijay R
First published: