ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் லெஜெண்ட் ஷேன் வார்னேவின் சாதனையை அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோன் முறியடித்துள்ளார். இந்திய அணியின் ரவிந்திர ஜடேஜாவின் விக்கெட்டை கைப்பற்றியபோது இந்த சாதனையை ஏற்படுத்தினார் நாதன் லியோன். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆஸ்திரேலிய அணியின் தரப்பில் மேத்யூ குன்மன் 5 விக்கெட்டுகளையும், நாதன் லியோன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஜடேஜாவின் விக்கெட்டை லியோன் வீழ்த்தியபோது வார்னேவின் சாதனையை பின்னுக்கு தள்ளினார். அதாவது ஆசிய மண்ணில் வெளி நாட்டை சேர்ந்த பவுலர் ஒருவர் எடுத்த அதிகபட்ச விக்கெட்டாக வார்னேவின் 127 விக்கெட்டுகள் இருந்தன. இந்நிலையில், ஜடேஜாவின் விக்கெட்டை ஆசிய மண்ணில் தனது 128 ஆவது விக்கெட்டாக கைப்பற்றி புதிய சாதனையை லியோன் ஏற்படுத்தியுள்ளார். ஆசிய மண்ணில் ஆசியா அல்லாத நாடுகளை சேர்ந்த பவுலர்களில் 100 விக்கெட்டிற்கு அதிகமாக எடுத்தவர்களாக, ஆஸ்திரேலியாவின் வார்மே மற்றும் நாதன் லியோன் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.
நியூசிலாந்து அணியின் டேனியல் வெட்டோரி 98 விக்கெட்டுகளும், தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் 92 விக்கெட்டுகளையும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 82 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், 3 ஆவது டெஸ்ட் இந்தூரில் நடைபெற்று வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket