கிரிக்கெட் உலகின் அதிர்ச்சி மரணங்களில் ரசிகர்களால் மிகவும் தாங்க முடியாத ஒரு மரணம் ஷேன் வார்னின் மரணம் தான் என்றால் அது மிகையானதே அல்ல. இப்போதும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி வர்ணனைகளில் வர்ணனையாளர்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் ஷேன் வார்னை நினைவுகூரும்போது நமக்குமே கண்களில் நீர்முட்டிக்கொண்டுதான் வருகிறது.
கடந்த மார்ச்சில் தாய்லாந்தில் மாரடைப்பு காரணமாக ஷேன் வார்ன் நம்மை விட்டு மறைந்தார். இன்று அவர் பிறந்த தினம். 53வது பிறந்த தினம். எத்தனையோ போட்டிகள் எத்தனையோ பந்துகள், எத்தனையோ விக்கெட்டுகளை மறக்க முடியுமா? மிகப்பெரிய கிரிக்கேட் மூளைக்காரர் என்றால் அது ஷேன் வார்ன் தான்.
அவரது சாதனை துளிகளில் சிலவற்றை இதோ பார்ப்போம்:
708 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர். டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டுகளில் முரளிதரனுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.
ஒருநாள், டெஸ்ட் இரண்டிலும் சேர்த்து 1000 சர்வதேச விக்கெட்டுகளைக்கைப்பற்றியவர்களில் முரளிதரன், ஷேன் வார்ன் இருவரும் உள்ளனர்.
ஷேன் வார்ன் 194 ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை 37 முறை எடுத்துள்ளார் ஷேன் வார்ன், இதிலும் 2ம் இடம். 2005-ல் ஒரே ஆண்டில் 96 விக்கெட்டுகளைக் கைப்பற்றி காலண்டர் ஆண்டில் அதிக விக்கெட்டுகளைச் சாய்த்த பவுலர் ஆனார்.
பேட்டிங்கில் சர்வதேசப் போட்டிகளில் 13 அரைசதங்களை அடித்தவர் ஷேன் வார்ன்.
Also Read: சஞ்சு சாம்சனுக்கு கொடுத்த வாக்குறுதியிலிருந்து தவறிய ரோஹித் சர்மா
இதோடு ஐபிஎல் 2008 தொடரில் தன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சாம்பியன் ஆக்கியதும் வார்னின் கேப்டன்சி திறமையையும், கிரிக்கெட் நுணுக்கங்களையும் எடுத்தியம்பியது.
1993-ல் மைக் கேட்டிங்கிற்கு பிட்சிற்கு வெளியே குத்தி மைக் கேட்டிங் ஆஃப் ஸ்டம்பை தெறிக்கவிட்ட பந்து இன்று வரை ‘நூற்றாண்டின் சிறந்த பந்து’ என்று வர்ணிக்கப்பட்டு வருகிறது.
1999 உலகக்கோப்பையில் அரையிறுதியில் வெற்றியை நோக்கி சவுகரியமாகப் பிரயாணித்துக் கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க அணியை தன் பவுலிங்கின் மூலம் சிதைத்து ஆஸ்திரேலியாவை இறுதிக்கு இட்டுச் சென்றவர், இந்த உலகக்கோப்பையில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.
ஆனால் உலக அணிகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ஷேன் வார்ன் இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை எடுத்ததில்லை. ஏனெனில் இந்திய அணியில் சித்து, சச்சின், திராவிட், லஷ்மண், போன்ற சிறந்த ஸ்பின்னுக்கு எதிரான சிறந்த பேட்டர்கள் இருந்ததே காரணம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Australia, Shane Warne