Home /News /sports /

மரண செய்தியை கடைசி ட்விட்டாக பதிவிட்ட ஷேன் வார்ன்... ஜாம்பாவனின் சோக வரிகள்

மரண செய்தியை கடைசி ட்விட்டாக பதிவிட்ட ஷேன் வார்ன்... ஜாம்பாவனின் சோக வரிகள்

ஷேன் வார்ன்

ஷேன் வார்ன்

Shane Warne Dies | ஷேன் வார்ன் இந்த ட்வீட்டை பதிவு செய்த 12 மணி நேரத்தில் அவர் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் மாரடைப்பால் திடீரென மரணமடைந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலைியல் ஷேன் வார்னின் கடைசி ட்விட்டும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்  ஜாம்பவான் ஷேன் வார்ன் தாய்லாந்தில் இருக்கும் ஒரு வில்லாவில் மயங்கி கிடந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஷேன் வார்ன் மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் தற்போது ஏதும் தகவல் தெரவிக்கவில்லை. அவர்கள் பெரும் சோகத்தில் இருப்பதாகவும் இதிலிருந்து மீள நேரம் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ஷேன் வார்னின் கடைசி ட்விட்டும் கிரிக்கெட் வீரர் மரணம் குறித்த பதிவு தான். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ராட் மார்ஷ் மரணத்திற்கு அவர் இரங்கல் தெரிவித்திருந்தார். அவர் தனது பதிவில் ராட் மார் காலமான என்ற செய்தி கேட்டு வருத்தமாக உள்ளது. இளம் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அவர் தான் உத்வேக். ராட் கிரிக்கெட் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். ரோட் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்திருந்தார்.



    ஷேன் வார்ன் இந்த ட்வீட்டை பதிவு செய்த 12 மணி நேரத்தில் அவர் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மாயாஜல சுழற்பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தவர். ஷேன் வார்ன் ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார்.

    ஷேன் வார்ன் ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 194 ஒரு நாள் போட்டிகளில் 293 போட்டிகளை விளையாடி உள்ளார். மேலும் 55 ஐபிஎல் போட்டிகளிலும் ஷேன் வார்ன விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் வெற்றி கோப்பையை தட்டி சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஷேன் வார்ன் தான் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Cricket, Shane Warne

    அடுத்த செய்தி