ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் (52) மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக அவர் உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மாயாஜல சுழற்பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தவர். ஷேன் வார்ன் ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார்.
ஷேன் வார்ன் ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 194 ஒரு நாள் போட்டிகளில் 293 போட்டிகளை விளையாடி உள்ளார்.
மேலும் 55 ஐபிஎல் போட்டிகளிலும் ஷேன் வார்ன விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் வெற்றி கோப்பையை தட்டி சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஷேன் வார்ன் தான் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
Cannot believe it.
One of the greatest spinners, the man who made spin cool, superstar Shane Warne is no more.
Life is very fragile, but this is very difficult to fathom. My heartfelt condolences to his family, friends and fans all around the world. pic.twitter.com/f7FUzZBaYX
ஷேன் வார்ன் மரண செய்தியை அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள் பலர் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.