முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ஆஸி. அணிக்காக நாதன் லியோன் இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும்’ – மைக் ஹஸி விருப்பம்

‘ஆஸி. அணிக்காக நாதன் லியோன் இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும்’ – மைக் ஹஸி விருப்பம்

நாதன் லியோன்

நாதன் லியோன்

ஆஸ்திரேலிய அணியின் மதிப்பு மிக்க வீரர்களில் ஒருவர். அவரது திறமையை அணி முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியோன் இன்னும் சில ஆண்டுகளுக்கு விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் மைக் ஹஸி விருப்பம் தெரிவித்துள்ளார். 35 வயதாகும் நாதன் லியோன் இந்திய சுற்றுப் பயணத்தில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணிக்கு எதிரான நாக்பூர் டெஸ்டில் ஒரேயொரு விக்கெட்டை கைப்பற்றிய அவர், அடுத்த 2 டெஸ்ட்களில் 18 விக்கெட்டுகளை சாய்த்து கவனம் பெற்றார். இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

நாதன் லியோன் ஆட்டம் குறித்து முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- வயது ஏறினாலும் இன்னமும் இளம் வீரரைப் போன்று நாதன் லியோன் விளையாடி வருகிறார். அவர் ஆஸ்திரேலிய அணியின் மதிப்பு மிக்க வீரர்களில் ஒருவர். அவரது திறமையை அணி முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க லியோனின் ஆட்டமும் மெருகேறிச் செல்கிறது. அணியில் பொறுப்பும் முதிர்ச்சியும் மிக்க வீரராக இருக்கும் நாதன் லியோன் இளம் வீரர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகவும் உள்ளார்.

பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது 30களில் தான் உச்ச நிலைக்கு வருவார்கள். என்னைப் பொருத்தவரையில் இன்னும் சில ஆண்டுகள் லியோன் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வேண்டும். இதேபோன்று டோட் மர்ஃபியும் சிறப்பாக பந்து வீசி கவனம் பெற்றுள்ளார். இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இவ்விருவரும் அணிக்கு வெற்றியைத் தேடித் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு மைக் ஹசி கூறியுள்ளார். 118 டெஸ்ட்களில் விளையாடியுள்ள நாதன் லியோன் மொத்தம் 479 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

First published:

Tags: Cricket