முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்டிலும் ஆஸ்திரேலியா தோற்று விடக்கூடாது’ – முன்னாள் வீரர் மெக்ராத் பேட்டி

‘இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்டிலும் ஆஸ்திரேலியா தோற்று விடக்கூடாது’ – முன்னாள் வீரர் மெக்ராத் பேட்டி

க்ளென் மெக்ராத்

க்ளென் மெக்ராத்

2 போட்டிகளில் வீரர்கள் பாடம் பெற்றிருப்பார்கள். அடுத்த 2 போட்டிகளில் அவர்கள் வெற்றிப் பாதைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணிக்கு எதிரான 4 டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணி தோற்று விடக் கூடாது என்றும், ஒயிட் வாஷ் ஆகாமல் இருந்தாலே அது சாதனைதான் என்றும் முன்னாள் வீரர் க்ளென் மெக்ராத் கிண்டலாக கூறியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக டெஸ்டில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் ஆஸ்திரேலியாவால் இந்தியாவுக்கு எதிராக 3 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், 3 ஆவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நாளை தொடங்கவுள்ளது. இதில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியின் மோசமான ஆட்டம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் க்ளென் மெக்ராத் கூறியதாவது- இந்தியாவுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்ற திட்டமே இல்லாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். பேட்ஸ்மேன்கள் அனைவரும் ரன் எடுத்தால்தான் அணியின் ஸ்கோர் உயரும். ஆனால் ஸ்மித், லபுசேஞ்ச் போன் சில வீரர்களை நம்பி அணி இருப்பதுபோல் தெரிகிறது.

சுழல் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என்று ஆஸ்திரேலிய அணிக்கு தெரியவில்லை. பெரும்பாலான விக்கெட்டுகளை இந்திய ஸ்பின்னர்கள் கைப்பற்றியுள்ளனர். முக்கிய ஆட்டக்காரர்கள் இல்லாததும் பின்னடைவுக்கு காரணமாக நினைக்கிறேன். கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் முதல் 2 டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி தோற்று விடக் கூடாது. ஒயிட்வாஷ் ஆகாமல் இருந்தாலே அதுவே ஆஸ்திரேலிய அணியின் சாதனையாக இருக்கும் என்று நினைக்கிறேன். 2 போட்டிகளில் வீரர்கள் பாடம் பெற்றிருப்பார்கள். அடுத்த 2 போட்டிகளில் அவர்கள் வெற்றிப் பாதைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

First published:

Tags: Australia, Australian