முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘அனுபவம் இல்லாத கேப்டன்… ஆர்வமில்லாத பயிற்சியாளர்..’ – ஆஸ்திரேலிய அணியை சாடும் முன்னாள் வீரர்

‘அனுபவம் இல்லாத கேப்டன்… ஆர்வமில்லாத பயிற்சியாளர்..’ – ஆஸ்திரேலிய அணியை சாடும் முன்னாள் வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.

இந்திய அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் மோசமான தோல்வி கிரிக்கெட் ஜாம்பவான்களை கொதிப்படைய செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து தோல்வி சந்தித்து வரும் நிலையில், இதற்கு கேப்டனும், பயிற்சியாளரும் முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர் ஜெஃப் லாசன் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேரலிய அணி விளையாடி வருகிறது. முதல் போட்டி நாக்பூரிலும், 2 ஆவது போட்டி டெல்லியிலும் நடைபெற்று முடிந்துள்ளன. இவை இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் இன்னிங்ஸ், 132 ரன்கள் வித்தியாசத்திலும், 2 ஆவதுபோட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்துள்ளது இந்திய அணி.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில நம்பர் ஒன் அணியாக இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவால் இந்திய அணியை 3 நாட்களுக்கு மேல் சமாளிக்க முடியவில்லை. இந்த மோசமான தோல்வி ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான்களை கொதிப்படைய செய்துள்ளது. இதுகுறித்து முன்னாள் வீரர் ஜெஃப் லாசன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இந்திய மைதானங்கள் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளன. சுழல் பந்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸிற்கு போதிய அனுபவம் கிடையாது. அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை மட்டுமே பெற்றுள்ளார். இதை வைத்துக் கொண்டு எப்படி அவரால் இந்திய அணியை சமாளிக்க முடியும்?

அஷ்வின் – ஜடேஜா பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் இழப்பை ஏற்டுத்தியது. இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் கேப்டனும், பவுலர்களும் திணறினர். குறிப்பாக பவுலர்களிடம் வியூகம் ஏதும் கிடையாது. ஆஸ்திரேலிய அணிக்கு போதிய அறிவுரைகள், வியூகங்களை துணை பயிற்சியாளராக இருக்கும் டேனியல் வெட்டோரி வழங்கியிருக்க வேண்டும். அவர் அதை செய்தாரா என்று தெரியவில்லை. ஆனால்உலகின் மிகத் தரமான சுழற்பந்து வீச்சாளராக வெடடோரி இருந்தார். இந்த தருணத்தில் அவர் துல்லியமான ஆலோசனைகளை அணிக்கு வழங்கியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Cricket