ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆரோன் ஃபின்ச், டேவிட் வார்னர் அதிரடி: 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்திய ஆஸ்திரேலியா

ஆரோன் ஃபின்ச், டேவிட் வார்னர் அதிரடி: 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்திய ஆஸ்திரேலியா

வார்னர்

வார்னர்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி 49.1 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இந்திய அணி வீரர்கள் வீசிய பந்தை நாலாப்புறமும் சிதறடித்தனர். அவர்கள் இருவருமே விக்கெட் இழப்பின்றி அணியை மிக எளிதாக வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

அதிரடியாக ஆடிய வார்னர் ஆட்டமிழக்காமல் 112 பந்துகளில் 3 சிக்சர், 17 பவுண்டரிகளுடன் 128 ரன்களைக் குவித்தார். மறுபுறம், ஃபின்ச் ஆட்டமிழக்காமல் 114 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 110 ரன்களைக் குவித்தார். இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். பும்ரா வீசிய 7 ஓவர்களில் 50 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.

Also see:

 

First published:

Tags: India vs Australia