முகப்பு /செய்தி /விளையாட்டு / பேட் கம்மின்ஸை ஆரத்தழுவி வரவேற்ற கர்ப்பிணி மனைவி - குவாரண்டைன் முடிந்து குடும்பத்துடன் இணைந்த ஆஸீ. வீரர்கள்

பேட் கம்மின்ஸை ஆரத்தழுவி வரவேற்ற கர்ப்பிணி மனைவி - குவாரண்டைன் முடிந்து குடும்பத்துடன் இணைந்த ஆஸீ. வீரர்கள்

பேட் கம்மின்ஸ்

பேட் கம்மின்ஸ்

14 நாள்கள் குவாரண்டைன் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா வீரர்கள் தங்களது இல்லத்துக்கு திரும்பினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

14-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து காலவரையின்றி போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர். இதில் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு புதிய சிக்கல் உருவானது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதால் இங்கிருந்து பயணிகள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது. இதன்காரணமாக, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பேட் கம்மின்ஸ் , ரிக்கி பாண்டிங் போன்றோர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனர். இதனையடுத்து இவர்கள் மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 10 நாள் குவாரண்டைனில் வைக்கப்பட்டு அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றனர்.

Also Read: உறங்காத இரவுகள்.. ஒன்றரை வருட வேதனை -ஜடேஜா ஷேரிங்ஸ்

மாலத்தீவுகளில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்கள், நிர்வாகிகள் உள்பட 38 பேர் தனி விமானம் மூலம் சிட்னி சென்றடைந்தனர். சிட்னி விமானநிலையத்தில் இருந்து அவர்கள் நேராக ஹோட்டலுக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு 14 நாள்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்டனர். குடும்பத்தினரை பார்க்க கூட அனுமதி மறுக்கப்பட்டது. 14 நாள்கள் குவாரண்டைன் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா வீரர்கள் தங்களது இல்லத்துக்கு திரும்பினர்.

ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் மனைவி பெக்கி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவர் நேராக கம்மின்ஸை பார்க்க ஹோட்டலுக்கு வந்துவிட்டார். குவாரண்டைன் முடித்து வெளியே வந்த கம்மின்ஸை ஆரத்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். உணர்ச்சிகரமான இந்த சந்திப்பை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘வீட்டில் இருப்பது மிகவும் நல்லது’ எனப் பதிவிட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் கோச் மைக் ஹஸ்ஸி கூறுகையில், “ எனது முதல் சோதனையில் பாசிடிவ் என வந்தது. பெரிய அச்சுறுத்தல் அளவில் இல்லாததால் அடுத்த சோதனையில் நெகடிவ் என்று வரும் என நம்பினேன். துரதிர்ஷ்டவசமாக மறுநாள் பரிசோதனை செய்ததிலும் பாசிடிவ் என்றே வந்தது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் ஏற்கெனவே சில அறிகுறிகளை உணரத் தொடங்கினேன். அதனால் எனக்கு தொற்று ஏற்பட்டிருக்கும் என்பதில் உறுதியாக இருந்தேன். நான் பேருந்தில் பந்துவீச்சு பயிற்சியாளர் அருகில் சில நேரங்களில் அமர்ந்திருந்தேன். அவருக்கு இருந்திருந்தால் எனக்கும் வர வாய்ப்பு உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Corona, COVID-19 Test, David Warner, IPL, Pat Cummins, Steve Smith