முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் க்ரீன் இடம்பெறுவார்’ – ஆஸி. பயிற்சியாளர் தகவல்

‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் க்ரீன் இடம்பெறுவார்’ – ஆஸி. பயிற்சியாளர் தகவல்

கேமரூன் க்ரீன்

கேமரூன் க்ரீன்

இந்திய மண்ணில் கடந்த 2004-ல் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. அதன்பின்னர் டெஸ்ட் தொடரை அந்த அணி வென்றதில்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான கேமரூன் க்ரீன் இடம்பெறுவார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்டு கூறியுள்ளார். இதுதொடர்பாக ஏ.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. இந்திய அணி வலுவாக இருக்கிறது. அதற்கு சவால் விடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் இருக்கும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின்போது கேமரூன் க்ரீனுக்கு காயம் ஏற்பட்டது. இதன்பின்னர் அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்திய சுற்றுப் பயணத்தில் கேமரூன் க்ரீன் இடம்பெற்றிருக்கிறார். அவரை அணியில் இருந்து நீக்கவில்லை. அவர் திறமையான பவுலர். மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் அற்புதமாக ஆடக் கூடியவர். அதேநேரம் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை முதல் டெஸ்ட் போட்டியில் நம்மால் எதிர்பார்க்க முடியாது. அவரது கை விரலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணம் அடையவில்லை. அவர் 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன். இதை நம்மால் உறுதியாக கூற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய மண்ணில் கடந்த 2004-ல் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. அதன்பின்னர் டெஸ்ட் தொடரை அந்த அணி வென்றதில்லை. இதனால் 19 ஆண்டுகால பின்னடைவுக்கு முடிவு கட்டும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் மோதவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரிலும், அடுத்தடுத்த போட்டிகள் டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத்திலும் நடைபெறுகின்றன.

First published:

Tags: Cricket