ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஸ்டோய்னிஸ் அதிரடியால் திக்குமுக்காடி போன இலங்கை அணி: 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி!

ஸ்டோய்னிஸ் அதிரடியால் திக்குமுக்காடி போன இலங்கை அணி: 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி!

கிரிக்கெட் வீரர் ஸ்டோய்னிஸ்

கிரிக்கெட் வீரர் ஸ்டோய்னிஸ்

அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டோயின்ஸ் 17 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, Indiaperthperthperthperth

  டி20 உலககோப்பையில் தொடரில் இலங்கை எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

  டி20 உலககோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினர்.

  இலங்கை அணி தரப்பில் நிஷாங்க 40 ரன்களும், அசலங்க 38 ரன்களை எடுத்தனர். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க், ஹாசிவுட், மேக்ஸ்வேல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

  158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த மிட்டெல் மார்ஷ் 17 ரன்களும், மேக்ஸ்வெல் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடர்ந்து தடுப்பட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஆரோன் பின்சுடன் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோயின்ஸ் இலங்கை அணியின் பந்துவீச்சை தும்சம் செய்தார்.

  இதையும் படிங்க: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிடம் பள்ளி சிறுவனாக இருந்தபோது விராட் கோலி பரிசு வாங்கினார... இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உண்மையா?

  அதிரடியாக ஆடிய அவர் 6 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை பறக்கவிட்டார். ஆட்டம் இறுதி ஓவர் வரை செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 21 பந்துகளை மீதம் வைத்துவிட்டு ஆட்டத்தை முடித்தார். 18 பந்துகளில் 59 ரன்களை அடித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவர்களில் 3விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Australia, Srilanka, T20 World Cup