Home /News /sports /

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக். வித்தியாசத்தில் வெற்றி…

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக். வித்தியாசத்தில் வெற்றி…

3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

பெரிய டார்கெட்டை ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்த போதிலும், இந்திய பவுலர்களின் மோசமான பந்து வீச்சு தோல்விக்கு வழிவகுத்து விட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றுள்ளது. பெரிய ஸ்கோரை அடித்தும் இந்திய அணி தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டி இன்று பஞ்சாபின் மொகாலியில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் களத்தில் இறங்கினர்.

    ரோகித் 11 ரன்களில் வெளியேற, அதிரடி ஆட்டம் ஆடிய கே.எல். ராகுல் 35 பந்துகளில்  3 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த கோலி 2 ரன்கள் மட்டுமே ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து இணைந்த சூர்ய குமார் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.

    பந்தில் இனி எச்சில் தடவுவதற்கு நிரந்தரத் தடை: பேட்டிங் டீமுக்கு 5 பெனால்டி ரன்கள்- அமலுக்கு வருகிறது ஐசிசியின் புதிய விதிகள்

    சூர்யகுமார் 25 பந்துகளில் 46 ரன்களும், பாண்ட்யா 30 பந்துகளில் 71 ரன்களும் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை எடுத்தது.

    இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய வீரர்கள் களம் புகுந்தனர். கேப்டன் ஆரோன் ஃபின்ச் 22 ரன்களில் வெளியேற மற்றொரு தொடக்க வீரர் கேமரூன் க்ரீன் 30 பந்துகளில் 61 ரன்களை விளாசினார்.

    அடுத்தடுத்து ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், கடைசி கட்டத்தில் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தார். இதனால் வெற்றி வாய்ப்பு ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது.

    21 பந்துகளை சந்தித்த வேட் 45 ரன்களை அதிரடியாக சேர்த்தார். இதனால் 19.2 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 211 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பெரிய டார்கெட்டை ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்த போதிலும், இந்திய பவுலர்களின் மோசமான பந்து வீச்சு தோல்விக்கு வழிவகுத்து விட்டது.

    இந்திய பவுலர்களில் புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 52 ரன்களும், உமேஷ் யாதவ் 4 ஓவர்களில் 53 ரன்களும், ஹர்ஷல் படேல் 4 ஓவர்களில் 49 ரன்களும் வாரிக்கொடுத்தனர்.

    ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்ட கேமரூன் க்ரீன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்த ஆட்டம் நாக்பூரில் வெள்ளியன்று நடைபெறுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Cricket

    அடுத்த செய்தி