ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆஸ்திரேலியா வயிற்றில் புளியை கரைத்த ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் : த்ரில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு இருக்கா?

ஆஸ்திரேலியா வயிற்றில் புளியை கரைத்த ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் : த்ரில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு இருக்கா?

அதிரடி காட்டிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான்

அதிரடி காட்டிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான்

இலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆட்டத்தின் முடிவினை பொறுத்தே ஆஸ்திரேலியா அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளதா என்பதை முடிவு செய்ய முடியும்.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • interna, IndiaAdelaide Adelaide Adelaide Adelaide

  டி20 உலககோப்பை தொடரின் இன்று நடைபெற்ற முக்கியமான சூப்பர்-12 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது.

  டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்றில் இன்றைய 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் டிம் டேவிட் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் கேப்டனாக செயல்பட்டார். மேலும் மிட்செல் ஸ்டார்க்கு பதிலாக ரிச்சர்சன் அணியில் இடம் பிடித்தார்.

  இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக டேவிட் வார்னர் - கீரின் பேட்டிங் செய்தனர். கீரின் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த மிட்செல் மார்ஸ் - டேவிட் வார்னர் ஜோடி அதிரடியாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 50ஆக இருந்தபோது வார்னர் 25 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்மித் 4 ரன்களில் வெளியேறிய பின்னர், அதிரடியாக விளையாடிய மார்ஸ் 45 ரன்னிலும் ஸ்டோய்னிஸ் 25 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

  தொடர்ந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை பறிகொடுத்து வந்த நிலையில் கடைசி வரை போராடிய மேக்ஸ்வெல் அரை சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  இதையும் படிங்க:  அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து கொண்டது நியூசிலாந்து அணி: விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய கேப்டன் வில்லியம்சன்!

  169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமளித்து விளையாடினர். தொடக்க வீரர் குர்பஸ் 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து நைப் 39 ரன்களிலும் ஜட்ரான் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆஸ்கானிஸ்தான் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து வந்த நிலையில் களமிறங்கிய ஆப்கான் அணியின் ஆல்ரவுண்டர் ரஷித் கான் ஆஸ்திரேலிய அணியின் வயிற்றில் புளியை கரைத்தார்.

  கடைசி இரண்டு ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. ஹாசில்வுட் வீசிய அந்த ஓவரில் ரஷித் கான் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வீசிய ஸ்டொய்னிஸ் முதல் பந்தை வொயிடாக வீசினார். அதில் ரன் எடுக்க முயன்ற ரசோலி ரன் ஆவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து 6 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்பட்டபோது ஸ்ரைக்கில் இருந்த ரஷித் கான் பந்தை பவுண்டரிக்கு அடித்து நான்கு ரன்களை விளாசினார்.

  இதையும் படிங்க:  சென்னை அணியில் இருந்து ஜடேஜா விலகும் முடிவுக்கு செக் வைத்த தோனி? சிஎஸ்கே-வில் இருந்து விடுவிக்கபோகும் வீரர்கள் யார் யார் தெரியுமா?

  அடுத்த பந்து டாட் பால் வீசிய ஸ்டொய்னிஸ், நான்காவது பந்தை ஸ்கோயர் லெக் பக்கம் சிக்ஸராக தூக்கி அடித்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இறுதியில் 2 பந்துகளில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டபோது 5வது பந்தை சிறப்பாக வீசிய ஸ்டொய்னிஸ் 2 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தார். கடைசி வரை போராடிய ரஷித் கான் கடைசி பந்தையும் நான்கு ரன்களுக்கு தூக்கி அடித்து ஆஸ்திரேலிய அணி வீரர்களை பயத்திலே உறைய வைத்திருந்தார்.

  இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 164 ரன்களை எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கடைசி வரை போராடிய ரஷித் கான் 23 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 48 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு அரையிறுதி வாய்ப்பும் தற்போது கேள்வி குறியாகியுள்ளது அவர்கள் - ரன் ரேட்டை வைத்துள்ளனர்.

  அதேவேளையில் அடுத்த போட்டியில் இலங்கை அணியிடம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலே ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைத்துவிடும். இலங்கை அணி இங்கிலாந்து அணியிடம் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணி நேரடியாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிடும். இருப்பினும் இலங்கை- இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆட்டத்தை பொறுத்தே அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளதா என்பதை முடிவு செய்ய முடியும்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Afganistan, Australia, T20 World Cup