கொரோனா தாக்கம் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் புதிய கட்டுப்பாடுகள்..!

வரும் வாரங்களில் குறைந்த பவுலர்களுடன், பேட்ஸ்மேன்கள் வலைபயிற்சியில் ஈடுபட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி.

கொரோனா தாக்கம் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் புதிய கட்டுப்பாடுகள்..!
கோப்பு படம்
  • Share this:
கிரிக்கெட் போட்டியின்போது பந்தை பளபளப்பாக்க உமிழ்நீர், வியர்வை பயன்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலிய விளையாட்டு அமைப்பு சார்பில், மருத்துவ வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து மூன்று பிரிவுகளாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, முதல் கட்டமாக இப்போதைய நிலையில் அனைத்து வித பயிற்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக வரும் வாரங்களில் குறைந்த பவுலர்களுடன், பேட்ஸ்மேன்கள் வலைபயிற்சியில் ஈடுபடலாம். பயிற்சியின் போது பந்தை பளபளப்பாக்க உமிழ்நீர் அல்லது வியர்வை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


மூன்றாவது கட்டமாக, சில மாதங்களுக்கு பிறகு போட்டிகளை நடத்தலாம். அதேநேரம், பந்தை பளபளப்பாக்க உமிழ்நீர் அல்லது வியர்வை பயன்படுத்த தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading