Home /News /sports /

கிளென் மேக்ஸ்வெலுக்கு கொரோனா தொற்று- ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் முடிவு வரவில்லை- பின் எப்படி?

கிளென் மேக்ஸ்வெலுக்கு கொரோனா தொற்று- ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் முடிவு வரவில்லை- பின் எப்படி?

கிளென் மேக்ஸ்வெல் கொரோனா தொற்று.

கிளென் மேக்ஸ்வெல் கொரோனா தொற்று.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பிக்பாஷ் டி20 லீகே இதனால் அவதியுற்று வருகிறது. கொரோனா தொற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் 13வது வீரர் ஆவார் கிளென் மேக்ஸ்வெல்.

    கோவிட் அச்சுறுத்தலிலும் சிட்னி டெஸ்ட் போட்டி இன்று ஆஸ்திரேலியா-இங்கிலாந்துக்கு இடையே தொடங்கி ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து வார்னர் விக்கெட்டை இழந்து 56 ரன்கள் எடுத்துள்ளது.

    பிக்பாஷ் லீக் வைரஸ் அச்சுறுத்தலினால் முடங்கியுள்ளது. ஆனால் கிளென் மேக்ஸ்வெல் வழக்கமான ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் எடுத்துக் கொண்டு தனிமையில் இருந்தார்.  இதன் முடிவு வரவில்லை, ஆனால் அதற்குள் ரேபிட் ஆண்டிஜென் டெஸ்ட் எடுத்துக் கொண்டதில் கொரோனா தொற்று உறுதியானது.

    ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் ரிசல்ட் இன்னும் வரவில்லை. அதற்கு முன்பாகவே ரேபிட் ஆண்டிஜென் டெஸ்ட்டிலேயே கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இந்த அணியில் 13 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மாற்று வீரர்களைக் கொண்டு மெல்போர்ன் அணியை வழிநடத்தினார் கிளென் மேக்ஸ்வெல். இதனையடுத்து வெள்ளிக்கிழமையன்று நடக்கும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் நடைபெறுவது சந்தேகமாகியுள்ளது.

    இதே மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் 8 உதவிப்பணியாளர்கள், பயிற்சியாளர், உதவிப்பயிற்சியாளர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

    இதையும் படிங்க: 2010 முதல் நியூசிலாந்தில் 400 ரன்களை 4 முறை எடுத்துள்ளது வங்கதேசம்; எங்கப்பா இந்தியா?

    ஏற்கெனவே ஆஸ்திரேலிய டெஸ்ட் வீரர் ட்ராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானது இவர் பூஸ்டர் டோஸ் உட்பட தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 322 பேர் கொரோனா சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Corona positive, Glenn Maxwell

    அடுத்த செய்தி