ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் உம்ரான் மாலிக் பவுலிங் வேற லெவலில் இருக்கும் : ஆனால் என்ன பயன்? - பிரேட் லீ ஆதங்கம்

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் உம்ரான் மாலிக் பவுலிங் வேற லெவலில் இருக்கும் : ஆனால் என்ன பயன்? - பிரேட் லீ ஆதங்கம்

மாதிரி படம்

மாதிரி படம்

40 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் பவுலருக்கும், அவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இடம்பெறாதது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரேட் லீ கடுமையாக விமர்சித்துள்ளார்.

16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை 23-ந்தேதி பாகிஸ்தானுடன் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகிறது.

இதனால்  முன்கூட்டியே பெர்த் நகரில் இந்திய அணி தொடர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகினார். இதனால் பும்ராவுக்கு பதிலாக அணியில் யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

முகமது ஷமி அல்லது தீபக் சாஹர் இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபக் சாஹர் காயம் காரணமாக விலகினார். இதையடுத்து வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்களும் பல கிரிக்கெட் வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் முகமது ஷமி இந்திய அணிக்கு தேர்வானர்.

இதையும் படிங்க: பும்ராவுக்கு பதிலாக டி20 உலககோப்பை அணியில் முகமது ஷமிக்கு இடம்: மேலும் 2 பேக்அப் பிளேயர்கள் ஆஸ்திரேலியா பயணம்

இந்த நிலையில் உம்ரான் மாலிக் இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரேட் லீ கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், ‘உங்கள் வசம் உலகின் சிறந்த கார் உள்ளது. ஆனால், நீங்கள் அதை கேரேஜில் நிறுத்தி வைத்துள்ளீர்கள். பிறகு அதனை வைத்திருப்பதில் என்ன பயன்? உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவர் இளம் வீரர். சர்வதேச போட்டிகளில் அதிகம் விளையாடியதில்லை. ஆனால் அவர் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்டவர். அவரை அணியில் சேர்த்திருக்க வேண்டும். அதுவும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அவரது பவுலிங் வேற லெவலில் இருக்கும். 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் பவுலருக்கும், அவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு’ என பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

First published:

Tags: BCCI, Indian cricket team, T20 World Cup