ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பார்ட்டியில் ஓடியபோது கால்வழுக்கி விபத்து.. மேக்ஸ்வெலுக்கு கால் முறிவு: 3 மாதங்களுக்கு நோ கிரிக்கெட்!

பார்ட்டியில் ஓடியபோது கால்வழுக்கி விபத்து.. மேக்ஸ்வெலுக்கு கால் முறிவு: 3 மாதங்களுக்கு நோ கிரிக்கெட்!

மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல்

பிப்ரவரியில் நடைபெற இருக்கும் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலும் மேக்ஸ்வெல் பங்கேற்பது மாட்டார் என தகவல்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வேலுக்கு விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

  8வது டி20 உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில் சூப்பர்-12 சுற்றுடன் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா அணி வெளியேறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் நண்பரின் பிறந்த நாள் பார்டிக்கு சென்று கலந்துக்கொண்டுள்ளார். அப்போது அவர் அங்கு விளையாட்டாக ஓடி வரும்போது கால் வழுக்கி விழுந்துள்ளார். அதில் எதிர்பாராதவிதமாக அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

  இதனையடுத்து உடனடியாக மருத்துவ சிகிச்சையில் இருக்கும் மேக்ஸ்வெல்லுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என கூறப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  இதையும் படிங்க: ஐசிசி-யின் அதிகாரமிக்க பதவிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா நியமனம்

  இதனால் இங்கிலாந்து அணியுடன் நடைபெறும் தொடரில் மேக்ஸ்வெல் பங்கேற்க முடியாது. அவருக்கு பதிலாக ஷான் அப்பாட் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலும் மேக்ஸ்வெல் பங்கேற்பது மாட்டார் என கூறப்படுகிறது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Australian, Glenn Maxwell