இன்றுடன் முடிகிறது தடைக்காலம்... உலகக்கோப்பையில் ஸ்மித், வார்னருக்கு இடம் கிடைக்குமா?

Aussie's #SteveSmith and #DavidWarner's #balltampering bans have ended | ஸ்மித், வார்னர் அணியில் இல்லாதபோது, ஆஸ்திரேலியா பல மோசமான தோல்விகளைச் சந்தித்தது.

news18
Updated: March 29, 2019, 1:00 PM IST
இன்றுடன் முடிகிறது தடைக்காலம்... உலகக்கோப்பையில் ஸ்மித், வார்னருக்கு இடம் கிடைக்குமா?
டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித். (கோப்புப்படம்)
news18
Updated: March 29, 2019, 1:00 PM IST
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தடைக்காலம் இன்றுடன் முடிகிறது.

தென்னாப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தி விதியை மீறி போட்டியின் போக்கை மாற்ற முயற்சித்தது, தொலைக்காட்சியில் தெளிவாக தெரிந்தது.

இந்த விவகாரத்தில் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

Smith, Warner, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்
டெஸ்டில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித். (Reuters)


மற்றொரு வீரர் பான்கிராஃப்ட்-க்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. இவரின் தடைக்காலம், கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதியுடன் முடிந்தது.

இதனை அடுத்து, அவர் ஆஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார்.

இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரின் தடைக்காலம் ஓராண்டு இன்றுடன் முடிகிறது. இருவரும் தற்போது, ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
Loading...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வார்னரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்மித்தும் விளையாடுகின்றனர்.

Cricket Australia, ஸ்மித், வார்னர்
உள்ளூர் போட்டியில் ஸ்மித் மற்றும் வார்னர் (Cricket Australia)


ஸ்மித், வார்னர் அணியில் இல்லாதபோது, ஆஸ்திரேலியா பல மோசமான தோல்விகளைச் சந்தித்தது. அவர்களின் தடைக்காலம் முடிந்ததை அடுத்து, வரும் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருவரும் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#CSKvRR | பாக்ஸிங்கிலும் பட்டைய கிளப்பும் ‘சின்ன தல’ ரெய்னா!

வெற்றியைப் பறித்த நோ-பால்... நடுவர்களை சாடிய காயம் பட்ட சிங்கம்...!

Also Watch...First published: March 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...