சதம் அடித்து அசத்திய அலிசா ஹேலி.... சாதனை படைத்த ஆஸ்திரேலிய பெண்கள் அணி

சதம் அடித்து அசத்திய அலிசா ஹேலி.... சாதனை படைத்த ஆஸ்திரேலிய பெண்கள் அணி
  • News18
  • Last Updated: October 10, 2019, 9:09 AM IST
  • Share this:
ஒரு நாள் தொடரில் தொடர்ந்து 18-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலிய பெண்கள் அணி.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய பெண்கள் அணி

3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இலங்கை பெண்கள் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை அடித்தது. அந்த அணியில் தொடக்க வீராங்கனை சமரி அட்டபட்டு 103 ரன்கள் அடித்து அசத்தினார்.


இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி அசத்தினார். ரேசல் ஹேய்ன்ஸ் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அலிசா ஹேலி 112 ரன்கள் அடித்து அசத்தினார்.

26.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய பெண்கள் அணி. இந்த வெற்றி மூலம் தொடர்ந்து 18 முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலிய பெண்கள் அணி.முன்னதாக 1997/98-க்களில் தொடர்ந்து 17 முறை ஆஸ்திரேலிய பெண்கள் அணி வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தது.

Also watch

First published: October 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading