Home /News /sports /

சதத்தின் பாதைக்குத் திரும்பிய ஸ்டீவ் ஸ்மித்- நியூசிலாந்துக்கு 3-0 ஒயிட்வாஷ் கொடுத்த ஆஸ்திரேலியா

சதத்தின் பாதைக்குத் திரும்பிய ஸ்டீவ் ஸ்மித்- நியூசிலாந்துக்கு 3-0 ஒயிட்வாஷ் கொடுத்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணி

கெய்ர்ன்ஸில் நேற்று பகலிரவாக நடைபெற்ற நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்திலி நியூசிலாந்தை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்று வென்றது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டுமே ஸ்டீவ்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • internationa, Indiaaustralia
    கெய்ர்ன்ஸில் நேற்று பகலிரவாக நடைபெற்ற நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்று வென்றது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டுமே ஸ்டீவ் ஸ்மித் தான்.

    ஆஸ்திரேலியாவின் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் கேப்டனும் டி20 உலகக் கோப்பையை வென்றவருமான ஏரோன் பிஞ்ச் சமீபத்தில் இதுதான் தன் கடைசி ஓருநாள் போட்டி என்று ஓய்வு அறிவித்த நிலையில் கடைசி ஒருநாள் தொடரில் 3-0 என்று நியூசிலாந்துக்கு ஒயிட்வாஷ் கொடுத்தார். இதுவரை பிஞ்ச் 146 போட்டிகளில் 17 சதங்கள், 30 அரைசதம் உட்பட 5,406 ரன்கள் எடுத்துள்ளார். பிஞ்ச் தலைமையில் ஆஸ்திரேலியா 55 ஒருநாள் போட்டிகளில் 31-ல் வென்று, 24-ல் தோல்வியடைந்துள்ளது.

    ஏற்கெனவே சேசிங்கில் கண்டபடி ஆல் அவுட் ஆன நியூசிலாந்து நேற்றும் டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா தரப்பில் இங்லிஸ், 10 ரன், பிஞ்ச் 5 ரன் விரைவில் நடையைக் கட்டினர். ஸ்மித், லபுஷேன் (52) சேர்ந்து 118 ரன்களை 3வது விக்கெட்டுக்குச் சேர்க்க லபுஷென் பெர்கூசனிடம் வெளியேறினார். அலெக்ஸ் கேரி 42, கேமரான் கிரீன் 25 ரன்கள் என்று ஸ்மித்துக்கு உறுதுணையாக நிற்க மேக்ஸ்வெல் 14 ரன்களில் ஏமாற்றினார்.

    ஸ்டீவ் ஸ்மித் 131 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் நீஷமை அடித்த மிகப்பெரிய சிக்சருடன் 105 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 267/5.

    இதையும் படிக்க: இரண்டே நாளில் தென் ஆப்பிரிக்காவை ‘பேக்’ செய்து அனுப்பிய இங்கிலாந்து- வெற்றியை உறுதி செய்தது

    எட்டக்கூடிய இலக்குதான் எனினும் டெவன் கான்வே (21), ஃபின் ஆலன் (35), 8.4 ஓவர்களில் 49 ரன்கள் என்ற போதிய தொடக்கம் கொடுத்தும், கேன் வில்லியம்சன் 27 ரன்களில் ரன் அவுட் ஆகியும் வெளியேற நியூசிலாந்து 112/5 என்று தடுமாறியது, ஆனால் பிறகு கிளென் பிலிப்ஸ் (47), நீஷம் (36), சாண்ட்னர் (30) என்று அருகில் கொண்டு வந்தனரே தவிர வெல்ல முடியவில்லை.  242 ரன்களுக்குச் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில்  ஸ்டார்க் 3 விக்கெட்,  கேமரூன் கிரீன் 2, சான் அபாட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Australia, Cricket, New Zealand

    அடுத்த செய்தி