Home » News » Sports » CRICKET AT LEAST MY TEAMMATES LIKE ME DIKHEAD ALL ASHWIN PAINE SAID DURING HEATED SLEDGING EPISODE AT SCG MUT

தொணதொணப்பு தாங்கவில்லை.. உன் பேச்சை நிறுத்து விளையாடுகிறேன்: வம்பிழுத்த பெய்னுக்கு ‘பெயின்’ கொடுத்த அஸ்வின்

உடனே கெட்ட வார்த்தையுடன் டிம் பெய்ன், “ஓஹோ இங்கயும் நீதான் செலக்டரா? குறைந்தபட்சம் என் டீம் ஆளுகளுக்கு என்னைப் பிடிக்கும். ஆனால் உன் டீம் ஆளுங்களே உன்னை முட்டாள்தான்னு நினைக்கிறாங்க இல்லையா?”

தொணதொணப்பு தாங்கவில்லை.. உன் பேச்சை நிறுத்து விளையாடுகிறேன்: வம்பிழுத்த பெய்னுக்கு ‘பெயின்’ கொடுத்த அஸ்வின்
அஸ்வினைப் பேசியே வெறுப்பேற்றும் டிம் பெய்ன்.
  • Share this:
டிம் பெய்னுக்கு மிக மோசமான டெஸ்ட் போட்டியாக இது அமைந்தது, 3 கேட்ச்களை இன்று மட்டும் விட்டார், முதல் இன்னிங்சிலும் கேட்சை விட்டார், ஆனால் பின்னால் நின்று கொண்டு தொண தொணவென்று எதையாவது அபத்தமாக பேசுவது மட்டும் அவருக்கு குறைவில்லை.

இன்று சிட்னி டெஸ்ட் போட்டியின் 5வது நாள், இந்திய அணியின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரில் முன்னிலை வகிக்கலாம் என்ற ஆஸ்திரேலிய கனவுக்கு ரிஷப் பந்த், புஜாரா அதிரடி மூலம் ஆப்பு வைக்க, பிற்பாடு 259 பந்துகள் பாறையாக நின்று வெறுப்பேற்றிய அஸ்வின் விஹாரி ஆட்டத்தை ட்ரா செய்தனர்.

இருவரும் கமின்ஸ், ஹேசில்வுட், ஸ்டார்க்கின் கல்லெறிக்குச் சமமான வேகப்பந்துகளையும் லயன் தான் வீசும் ஒவ்வொரு பந்துமே ஏதோ உலக மகா பந்து போல் கத்துவதும் சிரிப்பது, பேசுவதும், பின்னால் டிம் பெய்ன் தொணதொணப்பும் என்று பந்து வீச்சு வார்த்தை வீச்சு என்று இரண்டையும் எதிர்கொண்டு மீண்டு வந்தனர்.


இதில் குறிப்பாக ஒரு கட்டத்தில் அஸ்வின் பிரமாதமாக ஆட டிம் பெய்ன் கடுப்பில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

”உன்னை கப்பாவுக்கு (பிரிஸ்பன்) கூட்டிட்டுப் போறேன் ஆஷ், வூ ஹூ...” என்றார் பெய்ன்.
இதற்கு அஸ்வின், “ஆம்! நாங்கள் கூட உன்னை இந்தியாவுக்குக் கூட்டிட்டு போகப்போறோம் அதுதான் உன்னோட கடைசி சீரிஸ்” என்றார்.உடனே கெட்ட வார்த்தையுடன் டிம் பெய்ன், “ஓஹோ இங்கயும் நீதான் செலக்டரா? குறைந்தபட்சம் என் டீம் ஆளுகளுக்கு என்னைப் பிடிக்கும். ஆனால் உன் டீம் ஆளுங்களே உன்னை முட்டாள்தான்னு நினைக்கிறாங்க இல்லையா?”

உடனே பேட் செய்வதை நிறுத்திய அஸ்வின், “உன் பேச்சை நிறுத்து ஆடுகிறேன்” என்று பேட் செய்வதை நிறுத்தி விட்டார்.

பெய்ன் நிறுத்தாமல் : நான் நாள் பூரா பேசுவேன்.. என்றார்.

பவுலர் நேதன் லயனுக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் ஆட்டம் நின்று விட்டது என்றார், அதற்கு அஸ்வின், “உன் ஆள்தான் பிரச்சினை, என்னால் அல்ல” என்றார்.

பெய்ன் விடவில்லை மேலும், “எத்தனை ஐபிஎல் அணிகள் உன்னை விரும்புகின்றன? ஓ. நான் இந்தியாவுக்கு வருவேன், கேப்டனாக இருந்தால் வருவேன். இந்தியாவில் ஆடியிருக்கிறேன், சராசரி 60. ஞாபகம் இல்லையா?” என்று பேசிக்கொண்டே இருந்தார், இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
First published: January 11, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading