முகப்பு /செய்தி /விளையாட்டு / ஃபோட்டோவை கிழித்த ஆண்டர்சன்... பதிலடி கொடுத்த அஸ்வின்!

ஃபோட்டோவை கிழித்த ஆண்டர்சன்... பதிலடி கொடுத்த அஸ்வின்!

அஸ்வின்

அஸ்வின்

நான் செய்தது தவறு என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்று நினைக்கலாம். ஆனால் நாளை அவரே கூட மான்கட் முறையில் விக்கெட்டை எடுக்க நேரிடும் என்று அஸ்வின் கூறியுள்ளார்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ஃபோட்டோவை கிழித்த ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அஸ்வின்.

ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் மார்ச் மாதம் 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 25-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற போடியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் பஞ்சாப் அணியின் அஸ்வின் அவுட்டாக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் பஞ்சாப் அணியின் அஸ்வின் அவுட்டாக்கியது சரியா தவறா என கிரிக்கெட் ஜாம்பவான்கள் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அஸ்வின் ஃபோட்டோவை கிழித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கு அஸ்வின், ‘ நான் செய்தது தவறு என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்று நினைக்கலாம். ஆனால் நாளை அவரே கூட மான்கட் முறையில் விக்கெட்டை எடுக்க நேரிடும். கிரிக்கெட்டில் மான்கட் முறை இருக்கிறது. அதனால் அது பற்றி பேச வேண்டிய அவசியமில்லை’ என்று பதிலளித்துள்ளார்.

மேலும் என்னைப் பற்றி தெரிந்தவர்களுக்கு நான் சட்டவிரோதமாக எதையும் செய்யமாட்டேன் என்று தெரியும். இந்த சர்ச்சைக்குப் பிறகும் என்னுடைய அணியினர் எனக்கு துணை நிற்கின்றனர். பல வீரர்கள என்னிடம் வந்து நான் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று சொல்கின்றனர். மான்கட் முறையில் நான் விக்கெட்டை எடுத்தது குறித்த சர்ச்சை பேச்சுகள் என்னை பாதிக்கவில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:

ORANGE CAP:

PURPLE CAP:

RESULTS TABLE:

SCHEDULE TIME TABLE:

Also watch

First published:

Tags: IPL 2019, R Ashwin