HOME»NEWS»SPORTS»cricket aswin proud this series is unforgettable skv sada
EXCLUSIVE | 'முதல் டெஸ்ட் போட்டியில் மீம்ஸ் போட்டு கேலி செய்தனர்.. இந்த தொடர் மறக்க முடியாதது' - அஸ்வின் பெருமிதம்
முதல் டெஸ்ட் போட்டியில் 36க்கு ஆல் அவுட் ஆனவுடன் மீம்ஸ் போட்டு கேலி செய்தனர். அதற்கு பிறகு விராட் விலகல், காயத்தால் நட்சத்திர பவுலர்கள் விலகல் புதுமுக வீரர்களை வைத்து டெஸ்ட் தொடரை வென்றது மறக்கமுடியாதது என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்த இந்திய அணி வீரர்களில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர்.ஆஸ்திரேலியாவில் துபாய் வழியாக அதிகாலை 4 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்த இருவருக்கும் மேல தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாஷிங்டன் சுந்தருக்கு மாலை அணிவித்து அவரது தாய், தந்தை, நண்பர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரதேகமாக பேட்டியளித்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இதுவரை சாம்பியன்ஸ் கோப்பை, உலகக் கோப்பை என பல்வேறு தொடர்களில் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறேன். ஆனால் இந்த டெஸ்ட் தொடர் வெற்றி அதற்கு நிகரான வெற்றியாக கொண்டாடப்படுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் 36 க்கு ஆல் அவுட் ஆனவுடன் மீம்ஸ் போட்டு கேலி செய்தனர். அதற்கு பிறகு விராட் விலகல், காயத்தால் நட்சத்திர பவுலர்கள் விலகல் புதுமுக வீரர்களை வைத்து டெஸ்ட் தொடரை வென்றது மறக்கமுடியாததாகும்.
சென்னையில் அடுத்ததாக இங்கிலாந்திற்கு எதிராக விளையாடும் தொடரை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் விளையாண்டதற்கும், இங்கு விளையாடுவதற்கும் நிறைய மாற்றம் உள்ளது. அடுத்து 7 நாள் தனிமைப்படுத்துதலில் இருப்போம் பயிற்சி மேற்கொள்வதும் கடினம், அடுத்த சில தினங்களில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வெற்றிக்கு தயாராவோம் என தெரிவித்தார்.