Home /News /sports /

மறக்க முடியுமா? கோலியின் அதிரடி 183-ஐ? ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை அலறவிட்ட வெற்றி சேசிங்

மறக்க முடியுமா? கோலியின் அதிரடி 183-ஐ? ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை அலறவிட்ட வெற்றி சேசிங்

விராட் கோலியின் மாஸ்டர் சேசிங்

விராட் கோலியின் மாஸ்டர் சேசிங்

விராட் கோலி என்பவர் கிங் ஆக இருந்து இன்று பெரிய கேள்விக்குறியாகி விட்டார், ஆசியக் கோப்பை டி20 தொடரில் விராட் கோலி பார்முக்கு வருவாரா என்று அவரின் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் 2012ம் ஆண்டு ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானின் 329 ரன்கள் இலக்கை அசால்ட்டாக விரட்டி 183 ரன்கள் விளாசி பாகிஸ்தானை கதறவிட்ட கோலியின் அந்த இன்னிங்சை கொஞ்சம் அசைபோடுவோம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    விராட் கோலி என்பவர் கிங் ஆக இருந்து இன்று பெரிய கேள்விக்குறியாகி விட்டார், ஆசியக் கோப்பை டி20 தொடரில் விராட் கோலி பார்முக்கு வருவாரா என்று அவரின் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் 2012ம் ஆண்டு ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானின் 329 ரன்கள் இலக்கை அசால்ட்டாக விரட்டி 183 ரன்கள் விளாசி பாகிஸ்தானை கதறவிட்ட கோலியின் அந்த இன்னிங்சை கொஞ்சம் அசைபோடுவோம்.

    வங்கதேசத்தில் நடந்த 2012ம் ஆண்டு ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்குக் கேப்டன் தோனி. மிர்பூரில் 5வது போட்டியில் இந்தியாவும்-பாகிஸ்தானும் மோதின. பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆனால் ஓப்பனிங்கே பாகிஸ்தான் அசத்தியது, ஹபீஸ் 113 பந்துகளில் 9 பவுண்டரி ஒரு சிக்சருடன் 105 ரன்கள் விளாச, இன்னொரு தொடக்க வீரர் நசீர் ஜாம்ஷெட் 104 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்சருடன் 112 விளாச இருவரும் முதல் விக்கெட்டுக்காக 36 ஓவர்களில் 224 ரன்கள் சேர்த்தனர்.

    ஆனால் இவர்கள் அவுட் ஆன பிறகு உமர் அக்மல் 28 ரன்களில் வெளியேறினார், யூனிஸ் கான் மட்டுமே 52 ரன்கள் அதன் பிறகு எடுக்க ஷாஹித் அப்ரீடி 9 ரன்களில் நடையைக் கட்டினார். பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 329/6 என்ற பெரிய இலக்கை எட்டியது. இந்திய தரப்பில் பிரவீண் குமார் 10 ஒவர் 77 ரன்கள் 2 விக்கெட். அசோக் டிண்டா 47/2, அஸ்வின் 56/1.

    தொடர்ந்து இந்தியா ஆடியபோது ஸ்பின்னர் ஹபீசிடம் கவுதம் கம்பீர் டக் அவுட் ஆனார். இன்னொரு முனையில் சச்சின் இருக்க விராட் கோலி இணைந்தார். அந்த இன்னிங்சில் பவுண்டரி வேண்டுமா கோலி அடித்தார், சிங்கிள்ஸ், இரண்டு வேண்டுமா கோலி ஆடினார். 148 பந்துகளிலும் இதைச் செய்தார், அதனால்தான் 23 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 183 ரன்கள் விளாசினார். முதலில் சச்சினும் கோலியும் சயீத் அஜ்மல், உமர் குல் ஆகிய நல்ல பவுலர்களை அருமையாக நெகோஷியேட் செய்தனர் மற்றபவுலர்களான அய்ஜாஜ் சீமா, ஷாகித் அஃப்ரீடி, வகாப் ரியாஸ் (4 ஓவர் 50 ரன்) ஆகியோரை வெளுத்து வாங்கினர். 48 பந்துகளில் சச்சின் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் விளாசி 52 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து 19 ஓவர்களில் 133 ரன்களை 2வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். வஹாப் ரியாஸ் ஷார்ட் பிட்ச் போடுகிறேன் என்றும் கோலியின் பேடுகளை குறிவைக்கிறேன் என்று அவருக்கு வலுவான லெக் சைடில் வீசி ஏகப்பட்ட பவுண்டரிகளை கொடுத்தார்.

    டெண்டுல்கர் ஆட்டமிழந்தவுடன் ரோஹித் சர்மா (68) இணைந்தார். இருவரும் சேர்ந்து ஸ்கோரை 20வது ஓவரின் 133/2லிருந்து 46வது ஓவரின் 305க்குக் கொண்டு சென்றனர். 26.2 ஓவர்களில் 172 ரன்கள் பார்ட்னர்ஷிப். ஒரு கட்டத்தில் கோலி 32 பந்துகள் பவுண்டரி இல்லாமல் ஆடினார், ஆனால் அப்படியும் 25 ரன்களை அதில் எடுக்க முடிந்தது. கோலி 97 பந்துகளில் 100, 131பந்துகளில் 150, 148 பந்துகளில்ல் 183. வின்னிங் ஷாட் அடிக்க கோலியும் இல்லை, ரோஹித்தும் இல்லை மாறாக ரெய்னா ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 11 ரன்கள் எடுக்க தோனி 4 நாட் அவுட், இந்தியா 47.5 ஓவர்களில் 330/4 என்று அசாத்திய வெற்றி பெற்றதை மறக்க முடியுமா?
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asia cup, Asia cup cricket, Asia Cup cricket series, India vs Pakistan, Virat Kohli

    அடுத்த செய்தி