உலகக்கோப்பை டி20: இந்தியாவுடன் மோதும் பாகிஸ்தான் அணி அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி (கோப்பு படம்)

எமிரேட்சில் ஐபிஎல் தொடர் முடிந்து நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அங்கு கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

 • Share this:
  15 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணியில் மிடில் ஆர்டர் வீரர் ஆசிப் அலி மற்றும் குஷ்தில் ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, இவர்கள் தேர்வுக்கான காரணம் இல்லை, என்றும் இவர்களை தேர்வு செய்ததற்குரிய தகுந்த நம்பர்கள் அவர்களிடத்தில் இல்லை என்றும் அங்கு சர்ச்சை எழுந்துள்ளது. மிகவும் கண்டனத்துக்குரிய வகையில் பகர் ஜமான் மற்றும் சர்பராஸ் அகமெட் ஆகியோர் ஒதுக்கப்பட்டுள்ளனர் என்பதே.

  பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் ஆடவிருக்கிறது. 7 டி20 போட்டிகள் ராவல்பிண்டி மற்றும் லாகூரில் செப்.25 முதல் அக்டோபர் 14ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்தியாவின் பரமவைரியான பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையில் துபாயில் அக்.24ம் தேதி இந்திய அணியுடன் மோதுகிறது. டி20 உலகக்கோப்பை யுஏஇயிலும் ஓமனிலும் அக்டோபர் 17ம் தேதி முதல் நடைபெறுகிறது.

  அசிப் அலி தேர்வு மீது ஏன் இவ்வளவு காட்டம் 29 போட்டிகளில் 16.38 என்றுதான் சராசரி வைத்துள்ளார். இடது கை வீரரான குஷ்தில் ஷா 9 போட்டிகளில் 21 சராசரி வைத்துள்ளார்.

  இவர்கள் சராசரியைப் பார்க்காதீர்கள் இவர்கள் திறமையே வேறு என்று கூறுகிறது பாகிஸ்தான் தேர்வுக்குழு. பாகிஸ்தான் அணியில் ஆசிப் அலி, பாபர் அசாம், குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், ஷோயப் மக்சூத் உள்ளனர். முகமது ரிஸ்வான், அசம் கான் ஆகிய 2 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்களும், இமாத் வாசிம் முகமது நவாஸ், முகமது வாசிம், ஷதாப் கான் ஆகிய ஆல்ரவுண்டர்களும், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, முகமது ஹஸ்னைன், ஷாகின் ஷா அஃரீடி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

  பாகிஸ்தான் அணி வருமாறு: ஆசிப் அலி, பாபர் அசாம், குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், ஷோயப் மக்சூத், முகமது ரிஸ்வான், அசம் கான், இமாத் வாசிம் முகமது நவாஸ், முகமது வாசிம், ஷதாப் கான், ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, முகமது ஹஸ்னைன், ஷாகின் ஷா அஃரீடி.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: