ஊக்க மருந்து சர்ச்சை: இந்திய வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் தடை... பதக்கங்கள் பறிப்பு!

Asian #shotputchampion #ManpreetKaur has been suspended | 2017-ல் சீனாவில் நடந்த போட்டியில் மன்ப்ரீத் புதிய தேசிய சாதனை உடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

news18
Updated: April 10, 2019, 1:22 PM IST
ஊக்க மருந்து சர்ச்சை: இந்திய வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் தடை... பதக்கங்கள் பறிப்பு!
தடகள வீராங்கனை மன்ப்ரீத் கவுர். (Getty Images)
news18
Updated: April 10, 2019, 1:22 PM IST
ஊக்க மருந்து பயன்படுத்தியதாக ஹரியானாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை மன்ப்ரீத் கவுருக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான மன்ப்ரீத் கவுர் (29), கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் நடந்த ஆசிய கிராண்ட்பிரி தடகள போட்டியில் மகளிருக்கான குண்டு எறிதலில் 18.86 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை உடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதனையடுத்து, அதே ஆண்டின் ஜூன் மற்றும் ஜூலை மாதம் இந்தியாவில் நடந்த பெடரேஷன், ஆசிய தடகளம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான தேசிய போட்டியிலும் அவர் தங்கப்பதக்கம் வென்று இருந்தார்.


Manpreet Kaur, மன்ப்ரீத் கவுர்
இந்திய தடகள வீராங்கனை மன்ப்ரீத் கவுர்.


சீனாவில் நடந்த போட்டியின்போது மன்ப்ரீத்திடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், அடுத்தடுத்து நடப்பட்ட சோதனையிலும் முதல் போட்டியில் பயன்படுத்திய ஊக்க மருந்தின் தாக்கம் மன்ப்ரீத் கவுரிடம் இருப்பது தெரியவந்தது.

முதற்கட்டமாக, தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (நடா) அவரை இடைநீக்கம் செய்தது. விசாரணையின் முடிவில் மன்ப்ரீத் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் 4 ஆண்டுகள் தடை விதித்து நடா நடவடிக்கை எடுத்துள்ளது.

Loading...

இந்த தடை காலம் 2017-ம் ஆண்டு ஜூலை 20-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அந்த காலகட்டத்தில் மன்ப்ரீத் கவுர் வென்ற பதக்கம் மற்றும் சாதனைகளை இழக்க வேண்டியதிருக்கும்.

VIDEO: இண்டெர்நெட்டை விட வேகமா? தல தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...