Home /News /sports /

ஜூனியர் ஆசியக் கோப்பை: பாதி ஆட்டத்தில் கொரோனா பாசிட்டிவ்- ஆட்டமே ரத்து

ஜூனியர் ஆசியக் கோப்பை: பாதி ஆட்டத்தில் கொரோனா பாசிட்டிவ்- ஆட்டமே ரத்து

பாதி ஆட்டத்தில் கொரோனா பாசிட்டிவ்

பாதி ஆட்டத்தில் கொரோனா பாசிட்டிவ்

ஜூனியர் ஆசிய கோப்பை யு-19 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் சார்ஜாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேச அணிகள் மோதின. இதில் பாதி ஆட்டத்தில் நடுவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும் ...
    ஜூனியர் ஆசிய கோப்பை யு-19 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் சார்ஜாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதின. இதில் பாதி ஆட்டத்தில் நடுவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தொடரின் கடைசி லீக்கில் இலங்கைக்கு எதிராக வங்காளதேச அணி முதலில் பேட் செய்ய தொடங்கியது. வங்காளதேச அணி 32.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்திருந்த போது, நடுவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

    போட்டிக்கு முன்பு வீரர்கள், பயிற்சியாளர்கள் , நடுவர்கள் என அனைவருக்கும் வழக்கம்போல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. போட்டி நடந்து கொண்டு இருக்கும்போது அதன் முடிவுகள் வந்துள்ளன. இதில் நடுவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    அத்துடன் ஆட்டம் ரத்து செய்யப்படடு இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. நாளை நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் இந்தியா-வங்காளதேசம், பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன.

    இது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட செய்தியில், “இரண்டு நடுவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ், இருவரும் பாதுகாப்பாக உள்ளனர், இருவருக்கும் வழக்கமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்க ப்பட்டு வருகிறது. ரிசல்ட் வரும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை

    இதற்கிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,195 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு 781 ஆக அதிகரித்துள்ளது. 302 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

    இதையும் படிங்க: Mohammed Shami| என் அப்பா என்னை சைக்கிளிலேயே 30 கிமீ பயிற்சிக்கு அழைத்துச் செல்வார்- ஷமி உருக்கம்

    சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 9,195.

    இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,42,51,292.

    கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 7,347.

    இதுவரை குணமடைந்தோர்: 3,41,95,060.

    நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.40% என்றளவில் உள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 302.

    கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,80,592

    சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 77,002.

    இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 143.15 கோடி.

    இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asia cup cricket, Corona positive

    அடுத்த செய்தி