Home /News /sports /

ஆப்கன் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா விலகல்.. காரணம் குறித்து கே.எல்.ராகுல் விளக்கம்

ஆப்கன் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா விலகல்.. காரணம் குறித்து கே.எல்.ராகுல் விளக்கம்

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகி உள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் தொடரிலிருந்து வெளியேறி உள்ள நிலையில் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் அது ஆறுதல் வெற்றியாகவே இருக்கும். இந்திய அணி பாகிஸ்தான், இலங்கை அணி அடுத்தடுத்து தோல்வியடைந்ததால் கேப்டன் ரோஹித் சர்மா மீதான விமர்சனங்கள் வலுத்தன.

    இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை கே.எல்.ராகுல் ஏற்றுள்ளார். இன்றைய போட்டியிலும் இந்திய அணி டாஸை தோற்றது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    டாஸ்க்கு பின் பேசிய கேப்டன் கே.எல்.ராகுல், இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. அவர் ஓய்வில் இருக்கிறார். அவர் தொடர்ந்து விளையாடி வருவதால் ஒரு பிரேக் எடுத்துள்ளார். ரோஹித் சர்மாவை போல் ஹர்திக் பாண்டியா, சஹால் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக திணேஷ் கார்த்திக், தீபக் சாஹர், அக்ஷர் படேல் அணியில் இடம்பிடித்துள்ளதாக தெரிவித்தார்.

    Also Read : இந்திய அணியை கேலி செய்த இலங்கை பத்திரிகையாளர்

    டி20 உலகக்கோப்பை முன் ஆசிய கோப்பை தொடர் எங்களுக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. இந்த தோல்வியிலிருந்து சிலவற்றை நாங்கள் கற்றுக்கொண்டுள்ளோம். டி20 உலகக்கோப்பைக்கு முன் ஒவ்வொருவரின் தகுதியை கண்டறிய இது நல்ல வாய்ப்பாக இருந்துள்ளது என்றும் கே.எல்.ராகுல் தெரிவித்தார்.

    இந்திய அணி : கேஎல் ராகுல்(கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்
    Published by:Vijay R
    First published:

    Tags: Asia cup, Rohit sharma

    அடுத்த செய்தி