ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து - சவுரவ் கங்குலி அறிவிப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து - சவுரவ் கங்குலி அறிவிப்பு
சவுரவ் கங்குலி
  • Share this:
இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பத்தில் ஒருநாள் போட்டியாகவும், கடந்த தொடர் முதல் 20 ஓவர் போட்டியாகவும் நடத்தப்பட்டு வருகிறது.
15வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடப்பாண்டு செப்டம்பரில் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாடுவதில் சிக்கல் இருந்ததால், போட்டியை ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கை நாடுகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது.

Also see:



ஆஸ்திரேலியாவில் அக்டோபரில் தொடங்கவிருந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்பே ஆசிய கோப்பையை நடத்தி முடிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருந்தது. போட்டி கண்டிப்பாக நடைபெறும் என பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறியிருந்த நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி போட்டியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டியை நடத்த பிசிசிஐ  முயற்சித்து வருவதால் ஆசிய கோப்பையை ரத்து செய்திருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் விமர்ச்சித்துள்ளனர்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading