Home /News /sports /

Asia Cup 2022 : பாகிஸ்தானுக்கு எதிராக 4 விக்கெட்டுகள்… சூப்பர் ஃபார்மில் புவனேஸ்வர் குமார்

Asia Cup 2022 : பாகிஸ்தானுக்கு எதிராக 4 விக்கெட்டுகள்… சூப்பர் ஃபார்மில் புவனேஸ்வர் குமார்

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமின் விக்கெட்டை சாய்த்தார் புவனேஸ்வர் குமார்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமின் விக்கெட்டை சாய்த்தார் புவனேஸ்வர் குமார்.

Bhuvneshwar Kumar : 3 ஆவது ஓவரிலேயே பாபர்வெளியேற்றப்பட்டதால் பாகிஸ்தான் அணியின் ரன் குவிப்பு கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர் புவனேஸ்குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அவர் சூப்பர் ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பலம் சேர்த்துள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 147 ரன்களை எடுத்தது. இதையடுத்து 148 ரன்களை டார்கெட்டாக கொண்டு இந்தியா விளையாடி வருகிறது.

    148 ரன்கள் இலக்கு என்பதை சவாலானது என்றோ அல்லது எளிதானது என்றோ சொல்ல முடியாது. இந்திய பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

    Asia Cup 2022 : பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 148 ரன்கள் இலக்கு

    இந்திய அணியின் பந்து வீச்சு இன்று பாராட்டும் வகையில் அமைந்தது. குறிப்பாக புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களை வீசி 26 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.  ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா 4 ஓவர்களை வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

    குறிப்பாக டேஞ்சரஸ் பேட்ஸ்மேனாக கருதப்படும் பாகிஸ்தான் கேப்டன் பாபர்ஆசமின் விக்கெட்டை புவனேஸ்குமார் எடுத்தார். 3 ஆவது ஓவரிலேயே பாபர்வெளியேற்றப்பட்டதால் பாகிஸ்தான் அணியின் ரன் குவிப்பு கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டது.

    818 புள்ளிகளுடன் பாபர் ஆசம் டி20 பேட்ஸ்மேன்கள் தர வரிசையில், முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஆவது இடத்தில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 805 புள்ளிகளுடன் உள்ளார். சாப் கான், ஆசிப் அலி, நசீம் ஷா ஆகியோரும் புவனேஸ்வர் வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

    ஆவேஷ் கான் 2 ஓவர்கள் வீசி, 19 ரன்கள் கொடுத்து முக்கியமான பகர் ஸமான் விக்கெட்டை தூக்கினார். ஒட்டுமொத்த அளவில் பார்க்கும்போது, இந்தியாவின் பவுலிங் யூனிட் இன்றைய ஆட்டத்தில் பாராட்டும்படி செயல்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Asia cup cricket

    அடுத்த செய்தி