• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்...! சவுரவ் கங்குலி

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்...! சவுரவ் கங்குலி

சவுரவ் கங்குலி

சவுரவ் கங்குலி

  • Share this:
    துபாயில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள் மோதும் ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் சென்று இந்திய அணி பங்கேற்காது என்று உறுதியாக கூறப்பட்டது. இதனையடுத்து ஆசிய கோப்பை தொடர் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

    துபாயில் நடைபெறும் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கங்குலி, “இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 2012-13ம் ஆண்டு பிறகு நேரடி தொடரில் பங்கேற்பது கிடையாது. ஐசிசி நடத்தும் சாம்பியன் டிராஃபி, உலகக் கோப்பை தொடர்களில் மட்டும் பங்கேற்று வருகிறது.

    இதுப்போன்று ஆசியக் கோப்பையிலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதில் எந்த சிக்கலும் இருக்காது“ என்றுள்ளார். மேலும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ள இந்திய அணிக்கு தனது வாழ்த்தை தெரிவித்து கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: