Home /News /sports /

38 ஆண்டுகால ஆசியக் கோப்பை கிரிக்கெட் வரலாறு : 1984 முதல் 2018 வரை கோப்பையை வென்றவர்கள்

38 ஆண்டுகால ஆசியக் கோப்பை கிரிக்கெட் வரலாறு : 1984 முதல் 2018 வரை கோப்பையை வென்றவர்கள்

ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை

இந்த ஆசியக் கோப்பை தொடர்கலில் இதுவரை 1984 முதல் 2018 வரை பட்டம் வென்ற அணிகளைப் பார்ப்போம்:

  • News18
  • 5 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆசியக் கோப்பை 2022 ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) ஆரம்பமாகிறது. பரம வைரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஆகஸ்ட் 28 அன்று நடைபெறும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் மோதுகின்றனர்.  ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு சாம்பியனாக களமிறங்கும், மேலும் வெற்றியின் சாதனையை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில்  ஆடும் என்று எதிர்பார்க்கலாம்.

1984 ஆம் ஆண்டு தொடக்கப் பதிப்பில் இருந்து ஏழு முறை (ஆறு ஒருநாள் மற்றும் ஒரு T20I) சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்தியா, ஆசிய கோப்பை வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாகும்.
இந்த சீசனில், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் கடுமையான போட்டியாளர்களாக இருப்பார்கள். ஏனெனில் அவை எந்த நேரத்திலும் ஆட்டத்தை மாற்றும் திறமை கொண்ட வீரர்களைக் கொண்டுள்ளன. பங்களாதேஷ் சமீப காலங்களில் இரண்டு முறை ஆசியக் கோப்பைப் பட்டத்தை நெருங்கிவிட்டதால், அவர்கள் முதல் பட்டத்தை வெல்வதற்காக பயங்கரமாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த ஆசியக் கோப்பை தொடர்கலில் இதுவரை  1984 முதல் 2018 வரை பட்டம் வென்ற அணிகளைப் பார்ப்போம்:

1984, இந்தியா: ஆசியக் கோப்பையின் முதல் பதிப்பு 1984 இல் இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டது. ஒரு அணி மற்ற அணிக்கு எதிராக ஒரு முறை மோதினால் போதும்  இந்தியா இலங்கை, மற்றும் பாகிஸ்தானை எதிர்கொண்டு இரண்டையும் வென்றது, பாகிஸ்தான் அணி இலங்கை, இந்தியா இரண்டிடமும் தோற்றது, இலங்கை அணி ஒரே வெற்றிதான், இந்தியா 2 வெற்றி என்று ஆசியக் கோப்பையை வென்றது. எதிர்கொண்டது மற்றும் சுனில் கவாஸ்கரின் தலைமையில், அந்த அணி தொடக்க கோப்பையை வென்றது. அப்போது டெல்லியின் விக்கெட் கீப்பர் பேட்டர், ஆக்ரோஷ அதிரடி மன்னன் சுரேந்தர் கன்னா 107 ரன்கள் எடுத்து அதிகரன்கள் எடுத்த வீரராகத் திகழ்ந்தார்.



தொடர் நாயகனாக சுரேந்தர் கன்னா தேர்வு செய்யப்பட்டார், அந்தத் தொடரில்தான் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் வினோதன் ஜான் என்பவரை ஒரே ஓவரில் 16 ரன்களையோ, 20 ரன்களையோ சுரேந்தர் கன்னா அடித்தார், உடனே இலங்கை கேப்டன் அவர் ஓவரைக் கட் செய்தார், ஆனால் ஸ்டேடியத்தில் உள்ள இந்திய ரசிகர்கள், ‘வினோதன் ஜானிடம் கொடு’ வினோதன் ஜானிடம் கொடு’ என்று கோஷமிட்டு கேலி செய்தது பசுமையாக நினைவிருக்கிறது.

1986, இலங்கை: 2வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடந்தது. இந்தத் தொடரில்  மனக்கசப்பின் காரணமாக  இந்தியா கலந்து கொள்ளவில்லை. இதற்கு முன் 1985ல் இலங்கை சென்ற போது நடுவர்கள் கடுமையான மோசடியில் ஈடுபட்டதால் சர்ச்சைக்குரியதானது அந்தத் தொடர், அந்த மனக்கசப்பிலிருந்து மீளாத இந்தியா இந்த ஆசியக் கோப்பையை புறக்கணித்தது.  ஆகவே பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் பங்கேற்றன, அந்தத் தொடரில் இறுதிப் போட்டியில் திலிப் மெண்டிஸ் தலைமை இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது. அர்ஜுனா ரணதுங்கா அதிக ரன்களை எடுத்து தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

1988, இந்தியா: இந்தத் தொடர் டாக்கா, பங்களாதேஷில் நடைபெற்றது. இதில் இலங்கையை இந்திய அணி 6 விக்கெட்டுகளில் வீழ்த்தி கோப்பையை வென்றது.  முதலில் பேட் செய்த அர்ஜுனா ரணதுங்கா தலைமை இலங்கை அணி  176 ரன்களுக்குச் சுருண்டது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 3 விக்கெட்டுகளை 12 ரன்களுக்குக் கைப்பற்றினார். இந்திய அணிக்குக் கேப்டன் திலிப் வெங்சர்க்கார். தொடர்ந்து ஆடிய இந்திய அணி 180/4 என்று 37.1 ஓவர்களில் எடுத்து வென்றது, நவ்ஜோத் சித்து 87 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் அதிகபட்சமாக 76 ரன்களை எடுத்தார். ஸ்ரீகாந்த் 23 ரன்களில் ரன் அவுட். திலிப் வெங்சர்க்கார் 50. கோப்பையை வென்றது இந்தியா.

1990-91, இந்தியா: 1990-91 ஆசியக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றது, கோப்பையையும் இந்தியா வென்றது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அரசியல் சர்ச்சைகள் காரணமாக கலந்து கொள்ளவில்லை. கொல்கத்தாவில் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி 3ம் முறையாகக் கோப்பையை வென்றது. அசாருதீன் தலைமையில் இந்தியா கோப்பையை வென்றது, முதலில் பேட் செய்த இலங்கை 204/9 என்று மடிந்தது, கபில்தேவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இந்தியா 205/3 என்று 42 ஓவர்களில் வென்றது, சஞ்சய் மஞ்சுரேக்கர் 75, சச்சி டெண்டுல்கர் 53, அசாருதீன் 54.

ஆசிய கோப்பை 1995


1995, இந்தியா  : இந்தியா இதையும் வென்று ஹாட்ரிக் கோப்பை அடித்தது. இலங்கையை இறுதியில் தோற்கடித்தது இந்திய அணி இது இந்தியாவின் 4வது ஆசியக் கோப்பை வெற்றியாகும். இது பெப்சி ஆசியாக் கோப்பை ஷார்ஜாவில் நடந்தது. ஜெயசூரியா, அசாங்கா குருசிங்கா, அரவிந்த டிசில்வா, ரணதுங்கா என்று ஒரு காட்டடி படையே இருந்தது. குருசிங்கா 85 எடுக்க இலங்கை 230/7 என்று முடிந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 41.5 ஓவர்களில்ல் 233/2 என்று அபார வெற்றி பெற்றது, அசாருதீன் 90 ரன்களை விளாச, சித்து 84 ரன்களை எடுத்தார். சச்சின் டெண்டுல்கர் 41. பவுலிங்கில் அப்போது முரளிதரன் இருந்தார். ஆனால் விக்கெட் இல்லை. சமிந்தா வாஸ் ஒரு விக்கெட், ராமநாயகே ஒரு விக்கெட்.

1997, இலங்கை : 1997 மீண்டும் ஆசியக் கோப்பை இலங்கைக்கு வந்தது. 1996 உலகக்கோப்பையை வென்ற சாம்பியன் இலங்கை அணி பயங்கரமாக சாத்தி எடுத்துக் கொண்டிருந்த நேரம். இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது.  இது சச்சின் டெண்டுல்கர் கேப்டனான சமயம், கங்குலி 34, சச்சின் 53, அசாருதீன் 81 என்று இந்தியா 239/7 என்று மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இலக்கை விரட்டிய இலங்கை அணி 36.5 ஓவர்களில் 240/2 என்று வென்றனர். ஜெயசூரியா 63, மர்வன் அட்டப்பட்டு 84, ரணதுங்கா 62. வெங்கடேஷ் பிரசாத் ஜெயசூரியாவிடம் செம்மையாக வாங்கினார், 4 ஓவர் 43 ரன்கள். இந்தத் தொடர் நாயகன் அர்ஜுனா ரணதுங்கா.

2000, பாகிஸ்தான்: இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் 2000-த்தில் ஆசியக் கோப்பையை ஒருவழியாக வென்றது, வங்கதேசத்தில் நடைபெற்ற இந்தத் தொடரில் பாகிஸ்தான் கேப்டன் மொயின் கான் தலைமையில் முதன் முதலாக ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் வென்றது. முகமது யூசுப் அதிக ரன்களை எடுக்க அப்துல் ரசாக் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

2004, இலங்கை: மொத்தம் இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசத்தோடு முதல் முறையாக யுஏஇ, ஹாங்காங் சேர்க்கப்பட்டன. மரவன் அட்டப்பட்டு தலைமையில் இலங்கை கோப்பையை வென்றது. பிரேமதாஸா ஸ்டேடியத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை, இந்திய அணிக்கு கங்குலி கேப்டனாகியிருந்தார், இலங்கை அடித்த ஸ்கோரே 229 ரன்கள்தான். இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மட்டும்தான் 100 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார், மற்றவர்கள் சொற்பமாக ஆட்டமிழக்க இந்தியா 147/8 என்ற நிலையிலிருந்து ஹர்பஜன் சிங் (16) ஜாகிர் கான் (28) ஆகியோரது போராட்ட குணத்தினால் 6 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்து 193 வரை கொண்டு வந்தனர், கடைசியில் இந்தியா 203/9 என்று முடிந்தது.

2008, இலங்கை: 2008-ல் மகேலா ஜெயவர்தனே கேப்டன்சியில் இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது. இந்த முறையும் இந்திய அணிக்கு செம உதை, 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா. இலங்கை சாம்பியன் ஆனது. அஜந்தா மெண்டிஸ் என்ற புதிர் ஸ்பின்னரிடம் பாகிஸ்தான், இந்தியா எல்லாம் மடிந்தனர். சனத் ஜெயசூர்யா 2008-லும் பிரமாதமாக ஆடி 378 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார், அஜந்தா மெண்டிஸ் 17 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

ஆசிய கோப்பை 2010


2010-ல் தோனி தலைமையில் இந்தியா வெற்றி  பெற்றது. இலங்கையை 81 ரன்களில் வீழ்த்தி கடந்த ஆசியக் கோப்பை தோல்விக்கு தோனி பழி தீர்த்தார், தினேஷ் கார்த்திக்தான் பைனலில் 66 ரன்களை விளாசி வெற்றி பெறச் செய்தார்.

2012-ல் பாகிஸ்தான் அணி சாம்பியன் :  பாகிஸ்தானை வங்கதேசம் 236/9 என்று மட்டுப்படுத்தியது. சேசிங்கில் தமிம் இக்பால், 60, ஷாகிப் அல் ஹசன் 68  சேர்ந்து கோப்பையை வென்றிருப்பார்கள் ஆனால் துரதிர்ஷ்டவசமாக 2 ரன்களில் வங்கதேசம் தோல்வி கண்டது. இதனால் பாகிஸ்தான் 2வது ஆசியக் கோப்பையை வென்றது.

2014-ல் இலங்கை மீண்டும் சாம்பியன். 5வது முறையாக ஆசிய சாம்பியன் ஆயினர் இலங்கை. இதுவும் வங்கதேசத்தில்தான் நடந்தது இதில் பைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இலங்கை, மலிங்கா 5 விக்கெட்டுகள் சாய்க்க பாகிஸ்தான் 260/5, இலங்கை எளிதில் விரட்டி கோப்பையை வென்றது.

2016-ல் முதல் டி20 ஆசியக் கோப்பை - தோனி தலைமையில் இந்தியா வென்றது. ஒரு தலைபட்சமான இறுதிப் போட்டியில் இந்தியா வங்கதேசத்தை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி சாம்பியன் ஆனது, தோனி தலைமையில் 2வது ஆசியக் கோப்பை.

2018-ல் மீண்டும் இந்தியா ஆசிய சாம்பியன் இந்த முறை 50 ஒவர் வடிவத்துக்குத் திரும்பியது. துபாயில் வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தியது. 7வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது.
Published by:Vijay R
First published:

Tags: Asia cup

அடுத்த செய்தி