ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், விக்கெட் கீப்பர் பொறுப்புக்கு ரிஷப் பண்ட்டை விட தினேஷ் கார்த்திக் சிறந்த தேர்வாக இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் பேட்ஸ்மேன் சீதேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்க, பாகிஸ்தான் அணியை பாபர்ஆசம் வழிநடத்துகிறார். இந்தப் போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் பட்டியல் இன்னும் சிறிது நேரத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் விக்கெட் கீப்பர் பொறுப்புக்கு தினேஷ் கார்த்திக் சிறந்த தேர்வாக இருப்பார் என்று புஜாரா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
ரிஷப் பண்ட்டும், தினேஷ் கார்த்திக்கும் நல்ல பார்மில் இருக்கிறார்கள். இதனால் யாரை தேர்வு செய்வது என்பது அணி நிர்வாகத்திற்கு பெரும் தலைவலியாக இருக்கும். இந்த ஆட்டத்தில் சிறந்த ஃபினிஷரை நீங்கள் தேர்வு செய்ய விரும்பினால் அதற்கு தினேஷ் கார்த்திக் மிகச் சிறந்த தேர்வாக இருப்பார்.
10 - 20 பந்துகளில் அவரால் 40 - 50 ரன்களை அடிக்க முடியும். ஆனால் ரிஷப் பண்ட்டைத்தான் அணி நிர்வாகம் தேர்வு செய்யும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் இடதுகை ஆட்டக்காரர். இதனால் இடது - வலது காம்பினேஷன் எதிரணிக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் என்பதால் அணி நிர்வாகம் ரிஷபை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
Asia Cup 2022: பாகிஸ்தான் அணியை நாங்கள் மற்ற எதிரணிகளில் ஒன்றாகவே கருதுகின்றோம் - ரோகித் சர்மா
ஆடும் லெவனில் இடம் பெற சூரியகுமார் சரியான வீரராக இருப்பார். 4-வது வீரராக களத்தில் இறங்கி, பலமுறை தனது ஆட்டத்தை நிரூபித்திருக்கிறார். ஹர்திக் பாண்டியா சிறந்த ஃபினிஷராக இருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 150 - யை தாண்டி இருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்சை நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு புஜாரா கூறியுள்ளார். வலது கை ஆட்டக்காரரான புஜாரா மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக, பல சாதனைகளை ஏற்படுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Asia cup cricket, Cheteshwar Pujara, Cricket, Dinesh Karthik, Rishabh pant