Home /News /sports /

Asia Cup 2022 : பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 148 ரன்கள் இலக்கு

Asia Cup 2022 : பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 148 ரன்கள் இலக்கு

இந்திய அணியின் பந்து வீச்சு பாராட்டும் வகையில் இருந்தது.

இந்திய அணியின் பந்து வீச்சு பாராட்டும் வகையில் இருந்தது.

இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 148  ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை ஆப்கன் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.

    இன்று 2- ஆவது போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான், பாபர் ஆசம் ஆகியோர் களத்தில் இறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபர் ஆசம், பகர் சமான் ஆகியோர் தலா 10 ரன்களில் வெளியேற அடுத்து இணைந்த ரிஸ்வான் – இப்திகார் அகமது இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இருவரும் 3வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் பார்ட்னர் ஷிப் சேர்த்தனர். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுதது ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கி விளையாடி வருகிறது.

    இன்றைய ஆட்டம் என்பது விராட்கோலி பங்கேற்கும் 100-ஆவது சர்வதேச டி20 போட்டியாகும். இன்றைய ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா 10 ரன்களை எடுத்தால் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஏற்படுத்துவார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Asia cup cricket

    அடுத்த செய்தி