Home /News /sports /

Asia Cup 2022 : 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்திய அணி

Asia Cup 2022 : 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது இந்திய அணி

ஆட்ட நாயகன் ஹர்திக் பாண்ட்யா.

ஆட்ட நாயகன் ஹர்திக் பாண்ட்யா.

இன்றைய ஆட்டத்தில் 3 விக்கெட், 33 ரன்கள் என பவுலிங் பேட்டிங் இரண்டிலும் ஜொலித்தார் ஹர்திக் பாண்ட்யா. அவருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 2- ஆவது போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான், பாபர் ஆசம் ஆகியோர் களத்தில் இறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபர் ஆசம், பகர் சமான் ஆகியோர் தலா 10 ரன்களில் வெளியேற அடுத்து இணைந்த ரிஸ்வான் – இப்திகார் அகமது இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இருவரும் 3வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் பார்ட்னர் ஷிப் சேர்த்தனர். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை எடுத்தது. புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். கே.எல். ராகுல் ரன் ஏதும் எடுக்காமலும், கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களிலும் வெளியேறினர்.

    இதன்பின்னர் இணைந்த விராட்கோலி – ரவிந்திரா ஜடேஜா இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. 35 ரன்கள் எடுத்திருந்தபோது நவாஸ் பந்துவீச்சில் இப்திகார் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூர்ய குமார் யாதவ் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பொறுப்புடன் விளையாடிய ஹர்திக் பாண்ட்யா கடைசி நேரத்தில் அதிரடி காட்ட, இந்திய அணி 19.4-ஆவது ஓவரில் வெற்றி பெற்றது. 17 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் ஹர்திக் பாண்ட்யா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளையும், நசீம் ஷா2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

     
    Published by:Musthak
    First published:

    Tags: Asia cup cricket, Cricket, Hardik Pandya

    அடுத்த செய்தி