இலங்கைக்கு எதிராக இந்திய அணி துபாயில் நேற்று ஆசியக் கோப்பையில் தோல்வி தழுவி இறுதி வாய்ப்பை ஏறக்குறைய இழந்த நிலையில், நடுவரிசை பேட்டர்கள் மோசமான ஷாட்களை ஆடியதை தவிர்த்திருக்கலாம் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
விராட் கோலி ஸ்கூல் பையன் போல் இறங்கியவுடன் ‘வராக்கு’ ஷாட் என்ற கிராஸ் பேட் ஷாட்டை ஆடி பவுல்டு ஆகி தன் ஆளுமையை சிறுமைப் படுத்திக் கொள்வது போல் ஆடி அவுட் ஆனார். பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோரது தோல்வியும் இந்திய தோல்வியைத் தீர்மானித்தது.
இது தொடர்பாக ரோகித் சர்மா ஆட்டம் முடிந்து கூறியதாவது:
நாங்கள் தோல்வியின் பக்கம் நிற்கிறோம், இப்படித்தான் சொல்ல முடியும். எடுத்த ரன்களை இன்னும் கொஞ்சம் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கலாம். 10-15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். மிடிலில் ஆடிய வீரர்கள் தேவையை உணர்ந்து ஆடியிருக்க வேண்டும். என்ன மாதிரியான ஷாட்டை ஆட வேண்டும் என்பதில் தெளிவுடன் இருந்திருக்கலாம். இந்த அணி நல்ல வெற்றிகளைப் பெற்ற அணிதான் இருந்தாலும் ஒவ்வொரு தோல்வியிலும் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம்.
இலங்கை அணியின் அபாரத் தொடக்கத்தைப் பார்க்கும் போது பவுலிங் நன்றாகவே வீசினோம். ஸ்பின்னர்கள் ஆக்ரோஷமாக வீசினர். 3 வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றி யோசித்தோம். ஆனால் பெரிய பவுண்டரியாக இருப்பதால் ஸ்பின்னை திறம்பட பயன்படுத்தலாம் என்று கருதினோம். அஸ்வினைக் கொண்டு வருவதற்கு முன்பாக அவர்களது வலது கை பேட்டர்கள் கொஞ்சம் அதிக நேரம் ஆடிவிட்டனர்.
இதையும் படிங்க: ஸ்லோ பிட்சில் எப்படி பந்து வீச வேண்டும்-கற்றுக் கொடுத்த இலங்கை
ஹூடாவை கொண்டு வரலாம் என்று நினைத்தோம், ஆனால் அது நினைத்தபடி நடக்கும் என்று தோன்றவில்லை. ஆவேஷ் கான் உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. உலகக்கோப்பையின் போது அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்து விடும். ஹர்திக் 4வது வேகப்பந்து வீச்சாளராக இருப்பதையே விரும்புகிறோம்.
ஆனால் அனைத்து தெரிவுகளையும்தான் யோசிக்க வேண்டியுள்ளது. அணிச்சேர்க்கை கவலையளிக்கவில்லை. அடுத்தடுத்து 2 தோல்விகளைத்தானே அடைந்துள்ளோம், கடந்த உலகக்கோப்பைக்குப் பிறகு அதிகம் தோற்கவில்லை.
ஆசியக் கோப்பையில் எங்களுக்கு நாங்களே கொஞ்சம் அழுத்தம் கொடுக்க விரும்பினோம். இது போன்ற ஆட்டங்களினால்தான் நாங்கள் இன்னும் விடைகளை தேடிக்கொண்டிருக்கிறோம். நிறைய விடைகள் உள்ளன. அர்ஷ்தீப் சிங் ஒரு சிறந்த கடைசி ஓவர் பவுலராக உருவானது மகிழ்ச்சி. இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா. இன்றைய ஆசியக் கோப்பைப் போட்டியில் ஷார்ஜா மைதானத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன, இதில் பாகிஸ்தான் வென்று இறுதியை உறுதி செய்து விட்டால் அதன் பிறகான இந்தியா-ஆப்கான் மேட்ச் வெறும் சம்பிரதாயமே.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Asia cup cricket, India captain Rohit Sharma, India vs srilanka