Home /News /sports /

ஷாஹீன் அப்ரிடி விலகல் இந்தியாவுக்கு நிம்மதி- வக்கார் யூனிஸ் கருத்துக்கு இர்பான் பதான் பதிலடி

ஷாஹீன் அப்ரிடி விலகல் இந்தியாவுக்கு நிம்மதி- வக்கார் யூனிஸ் கருத்துக்கு இர்பான் பதான் பதிலடி

வக்கார் யூனிஸுக்கு இர்பான் பதிலடி

வக்கார் யூனிஸுக்கு இர்பான் பதிலடி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் டி20 தொடரிலிருந்து பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரீடி காயம் காரணமாக விலகியது இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு பெரிய நிம்மதி என்று வக்கார் யூனிஸ் தெரிவித்த கருத்துக்கு இந்திய முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளார் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    ஆசியக் கோப்பை கிரிக்கெட் டி20 தொடரிலிருந்து பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரீடி காயம் காரணமாக விலகியது இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு பெரிய நிம்மதி என்று வக்கார் யூனிஸ் தெரிவித்த கருத்துக்கு இந்திய முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளார் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார்.

    இடது கை வேகப்பந்து வீச்சு என்றால் இப்போது என்றில்லை எப்போதுமே இந்தியாவுக்கு நடுக்கம்தான், ஹசீம் ஹபீஸ் முதல் வாசிம் அக்ரம், முகமது ஆமிர், ஷாஹின் அப்ரீடி, டாப்லி, சமீபமாக வெஸ்ட் இண்டீஸின் ஆபெட் மெக்காய் ஆகியோரிடத்தில் இந்திய அணியினர் மடிந்தனர் என்பதில் சந்தேகமில்லை.

    இதோடு கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் டி20 தொடரின் முதல் போட்டியிலேயே இந்தியாவின், ராகுல், ரோஹித், கோலி மூவேந்தர்களை காலி செய்தார் ஷாஹின் அப்ரீடி.

    இந்தப் பின்னணியில்தான் வக்கார் யூனிஸ், ‘ஷாஹின் அப்ரீடி விலகியது இந்திய டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு பெரிய நிம்மதி” என்று ட்வீட் செய்துள்ளார்.

    ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் டெஸ்ட் ஹாட்ரிக் எடுத்த இர்பான் பதான் இதற்குப் பதிலடி கொடுக்கையில், “இந்திய அணியிக் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆடாதது மற்ற அணிகளுக்கும் பெரிய நிம்மதிதான்” என்று சூக்குமமாக வக்கார் யூனிஸுக்கு பதிலடி கொடுத்துள்ளார் .

    ஆகஸ்ட் 28ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஆசியக் கோப்பையில் மோதுகின்றன.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asia cup, Asia cup cricket, Asia Cup cricket series, India vs Pakistan

    அடுத்த செய்தி