Home /News /sports /

சூரியகுமார் யாதவை சிரம் தாழ்த்தி வணங்கிய விராட் கோலி - வைரல் வீடியோ

சூரியகுமார் யாதவை சிரம் தாழ்த்தி வணங்கிய விராட் கோலி - வைரல் வீடியோ

விராத் கோலி

விராத் கோலி

நேற்று ஹாங்காங்குக்கு எதிராக சூரியகுமாரின் இன்னிங்சை ரன்னர் முனையில் இருந்து பார்த்த விராட் கோலி கடைசியில் பெவிலியன் திரும்பும்போது சூரியாவுக்காக காத்திருந்து அவரை சிரம் தாழ்த்தி வணங்குவது போல் செய்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சூரியகுமார் யாதவ்வை 3ம் நிலையில் இறக்க வேண்டும் என்ற குரல்கள் கேட்கத் தொடங்கி விட்டன, அப்போது கோலி? அவர் அடுத்த டவுனில் தான் இறங்க வேண்டும், ஏனெனில் நேற்று ஹாங்காங்குக்கு எதிராக சூரியகுமாரின் இன்னிங்சை ரன்னர் முனையில் இருந்து பார்த்த விராட் கோலி கடைசியில் பெவிலியன் திரும்பும்போது சூரியாவுக்காக காத்திருந்து அவரை சிரம் தாழ்த்தி வணங்குவது போல் செய்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    சூரியகுமார் யாதவ் நேற்று இறங்கியவுடனேயே 3 பவுண்டரிகள் விளாசி அசத்தினார். 360 டிகிரி வீரராக இந்தியாவின் ஏ.பி.டிவிலியர்ஸ் என்பதை நேற்று உறுதி செய்தார். அதுவும் கடைசி ஓவரில் 4 சிக்சர்களை அவர் விளாசிய போது, ஒரு ஷாட்டுக்கு அவர் ஸ்கூப்புக்குத் தயாரானார், ஆனால் பந்து மிகவும் வெளியே வீசப்பட்டதால் அப்படியே ஷாட்டை மாற்றி கவர் திசையில் அடித்த சிக்ஸ் அற்புதம்.

    சூரியகுமார் யாதவுக்கும் விராட் கோலிக்கும் உறவு நிலைகள் சரியாக அமைந்ததில்லை, தன்னை அணியில் எடுக்கவில்லை என்று சூரியகுமார் யாதவ் 2021 ஐபிஎல் தொடரில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தன் நெஞ்சைக் குத்திக் காட்டி, கோலிக்கு அறிவுறுத்தினார். டிவிட்டரில் சூசக மோதலும் நடந்தது.



    ஆனால், இப்போது பல் பிடுங்கப்பட்ட விராட் கோலி உண்மையில் பழசை நினைவில் கொள்ளாமல் மனமார சூரியகுமார் யாதவ்வைப் பாராட்டினார். இருவரும் நேற்று 42 பந்துகளில் 98 ரன்கள் சேர்த்தனர், கடைசி 3 ஓவர்களில் 57 ரன்கள்.

    இதில் சூரியகுமார் பங்களிப்பு 68 ரன்கள், இதற்கு அவர் 25 பந்துகளைக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. இது குறித்து சூரியகுமார் யாதவ் கூறுகையில், ‘கோலி ஒரு சீனியர் பிளேயர், எத்தனை பெரிய வீரர், அவர் இப்படி திடீரென செய்து விட்டார், தான் இதனை எதிர்பார்க்கவில்லை என்றும் இதனால் தான் மடிந்து விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Asia cup cricket, Team India, Virat Kohli

    அடுத்த செய்தி