Home /News /sports /

சிகிச்சைக்கு லண்டன் செல்கிறார் ஷாஹின் அஃப்ரிடி: டி20 உலகக்கோப்பை ஆடுவது சந்தேகம்?

சிகிச்சைக்கு லண்டன் செல்கிறார் ஷாஹின் அஃப்ரிடி: டி20 உலகக்கோப்பை ஆடுவது சந்தேகம்?

ஷாஹின் அஃப்ரிடி

ஷாஹின் அஃப்ரிடி

Shaheen Afridi : வலது முழங்காளில் காயம் ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தானின் இடது கை புதிய சுல்தான் ஆஃப் ஸ்விங் ஷாஹின் ஷா அப்ரிடி மேல் சிகிச்சைக்கு லண்டன் செல்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • INTER, IndiaDubai
    வலது முழங்காளில் காயம் ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தானின் இடது கை புதிய சுல்தான் ஆஃப் ஸ்விங் ஷாஹின் ஷா அப்ரிடி மேல் சிகிச்சைக்கு லண்டன் செல்கிறார், இதனையடுத்து சிகிச்சை அதன் பிறகான புனருத்தாரண உடல் நல மீட்பு காலக்கட்டம் ஆகியவற்றைப் பார்க்கும் போது டி20 உலகக்கோப்பைக்குள் தயாராவாரா என்பது சந்தேகமாகியுள்ளது

    ஆசிய கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி காயம் காரணமாக விலகினார். அவருக்கு வலது முழங்காளில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகினார். ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடாவிட்டாலும் அவர் யுஏஇயில் தங்கள் அணியிருடன் தங்கி காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், அவரை லண்டனுக்கு அனுப்பி உயர் சிகிச்சை அளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நஜீபுல்லா சூம்ரோ கூறும்போது, ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு தடையற்ற, முழுவீச்சான முழங்கால் நிபுணர் பராமரிப்பு தேவைப்படுகிறது.  உலகின் சிறந்த விளையாட்டு மருத்துவ வசதிகளை லண்டன் வழங்குகிறது. வீரரின் நலன் கருதி, அவரை அங்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்,'' என தெரிவித்துள்ளார்.

    Also Read: பாகிஸ்தானுக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது - புவனேஷ்வர் குமார்

    இதனையடுத்து அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடருக்குள் அவர் முழு உடல் தகுதி பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  நடப்பு ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் நெருக்கமான தோல்வியைத் தழுவியதையடுத்து பாகிஸ்தான் ரசிகர்கள் ஷாஹின் ஷா அப்ரீடி இருந்திருந்தால் இந்திய அணியை ஒரு வழி செய்திருப்பார் என்ற ரீதியில் மனக்கணக்கு போட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Asia cup cricket, Cricket, Pakistan cricket

    அடுத்த செய்தி