Home /News /sports /

ஆசியக்கோப்பை ஃபைனல் - இன்று மல்லுக்கட்டும் இலங்கை, பாகிஸ்தான்

ஆசியக்கோப்பை ஃபைனல் - இன்று மல்லுக்கட்டும் இலங்கை, பாகிஸ்தான்

ஆசியக்கோப்பை

ஆசியக்கோப்பை

Asia cup 2022 : ஆசியக் கோப்பையை இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Internatio, IndiaDubai
    ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

     

    ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 27ம் தேதி முதல் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. கோப்பையை வெல்லும் அணியை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம், இந்திய நேரப்படி துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    இலங்கை அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், அதன்பின் சுதாரித்து அபாரமாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிசாங்கா, குசால் மென்டிஸ் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பாகிஸ்தானை பொறுத்தவரை கேப்டன் பாபர் ஆசம், ஃபார்மை இழந்து தவித்து வருகிறார். எனினும் முகமது ரிஸ்வான், ஃபக்கர் சமான், ஆகியோர் சிறப்பாக விளையாடுவது அந்த அணிக்கு பலம்.

    முகமது நவாஸ், ஷடாப் கான் ஆகியோரும் சிறப்பாகவே பந்து வீசுகின்றனர். சம பலம் வாய்ந்த இரு அணிகளும் களம் இறங்குவதால், கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதுவரை ஆசியக் கோப்பையை இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Asia cup, Asia Cup Final, Pakistan cricket, Srilanka

    அடுத்த செய்தி