ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே சமபலம் உள்ள அணிகள்தான், ஆனால் பேட்டிங்கில் இலங்கையின் கை கொஞ்சம் ஓங்கியிருக்கிறது என்றே கூற வேண்டும்.
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) முதலில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தங்களால் இந்த போட்டியை நடத்த இயலாது என்று கூறிவிட்டது. இதையடுத்து அங்கு நடைபெற இருந்த 15-வது ஆசிய கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதன்படி இந்த போட்டி அங்குள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி செப்டம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது.
அணிகளின் பிரிவுகள்:
இதில் பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும்,'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
சூப்பர் 4 சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.
இன்று ஆப்கான் - இலங்கை போட்டி:
2020 முதல் ஆப்கானிஸ்தான் அணி பிரமாதமாக ஆடி வருகிறது. அயர்லாந்துக்கு எதிராக டி20 தொடரை வென்றது, ஜிம்பாப்வேவுக்கு எதிராக இருமுறை தொடரை வென்றது. பங்களாதேஷுக்கு எதிராக ஒரு தொடரை சமன் செய்துள்ளது. மாறாக இலங்கை 2020-லிருந்து ஒரே ஒரு டி20 தொடரையே வென்றுள்ளது. அதுவும் இந்தியாவுக்கு எதிராக. இந்தியா என்றால் நட்சத்திர டாப் வீரர்கள் ஆடிய தொடர் அல்ல, 7 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகி இந்திய சி அணியை இலங்கை வென்றது என்றே கூற வேண்டும்.
Also Read: டைமண்ட் லீக் சாம்பியனான முதல் இந்தியர்..!- வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா
பிட்ச் நிலவரம்:
கடும் வெயில் அடிக்கும் என்பதால் பிட்சை தண்ணீர் ஊற்றி ஊற்றி குறைந்தது முதல் அரை மணி நேரத்துக்காவது பிட்சில் ஈரப்பதம் இருக்குமாறு செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த முறை பனிப்பொழிவு இருக்காது.
இலங்கை உத்தேச லெவன்: குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலகா, சரித் அசலங்கா, பனுகா ராஜபக்ச, தனஞ்ஜெய டிசில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சமிகா கருணரத்னே, மாஹிஷ் தீக்ஷனா, தில்ஷன் மதுஷங்கா.
ஆப்கானிஸ்தான் அணி: முகமது நபி (கேப்டன்), ஹஸ்ரத்துல்லா சசாய், ரஹமனுல்லா குர்பாஸ் (வி.கீ), இப்ராஹிம் சத்ரான், நஜிபுல்லா சத்ரான், சமியுல்லா ஷின்வாரி, ரஷீத் கான், கரீம் ஜனத், நவீன் உல் ஹக், முஜிப் உர் ரஹ்மான், நூர் அகமது.
இரு அணிகளும் ஒரேயொரு முறைதான் டி20 போட்டியில் ஆடியுள்ளன, அது 2016 உலகக்கோப்பையில், அப்போது இலங்கை வென்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.