பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் குறைந்த இலக்கான 147 ரன்களை விரட்டிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் நசீம் ஷா பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார்.
பிறகு ரோஹித் சர்மா, 12, கோலி 35 என்று ஸ்கோரை 50க்குக் கொண்டு சென்றனர்.
இந்தப் பார்ட்னர்ஷிப் இருவருக்கு ஏகப்பட்ட லக்குகள், பந்துகள் மட்டையில் சரியாகச் சிக்குவதில்லை. இன்சைடு எட்ஜ்கள், மட்டையின் வெளிவிளிம்பை நூலிழையில் தவறவிடும் தப்புத் தப்பான ஆட்டம் கணிப்பு என்று சொதப்பித் தள்ளினர்.
அதுவும் இருவரும் அவுட் ஆன விதம் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. முதலில் ரோஹித் சர்மா இறங்கி வந்து அடிக்க முற்பட்டு லாங் ஆஃபில் கேட்ச் ஆனார். விராட் கோலி தடவல் இன்னிங்ஸ்களுக்கு இடையே சில நல்ல பவுண்டரிகளை அடித்தாலும் 35 ரன்களில் அதே போல் லாங் ஆஃபில் இப்திகாரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
ஒருவழியாக ஜடேஜா, ஹர்திக் பாண்டியா பார்ட்னர்ஷிப்பினால் இந்தியா வென்றது, இந்நிலையில் சுனில் கவாஸ்கர், ரோஹித் சர்மா, விராட் கோலியின் ஷாட்களை விமர்சனம் செய்துள்ளார்:“லோகேஷ் ராகுல் ஒரே ஒரு பந்தைதான் எதிர் கொண்டார். அதை வைத்துக் கொண்டு எதையும் தீர்மானிக்க முடியாது. ரோஹித்தும் கோலியும் சிறிது நேரம் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் கணிசமான ரன்களைப் பெற்றனர்.
Also Read: இது சிக்ஸ் அடிக்கும் ஷாட் அல்ல, கேட்சிங் பிராக்டீஸ்- கோலி ஷாட் குறித்து கம்பீர் விமர்சனம்
இதற்கு முன்பு கோலியின் ஃபார்ம் பற்றி மக்கள் பேசும் போது அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று கூறிக்கொண்டே இருந்தேன்.
ஆனால் இந்த போட்டியில் அவருக்கு அதிர்ஷ்டம் இருந்தது. கேட்ச் தவறியது. நிறைய இன்சைட் எட்ஜ்கள் என வந்த போதும் நல்ல ஷாட்கள் நிறைய ஆடினார். கோலி - ரோகித் தங்களுக்கு கிடைத்த சிறப்பான தொடக்கத்தை 60 - 70 ரன்களுக்கு மாற்றியிருக்க வேண்டும். ஆனால் மோசமான ஷாட்களால் வெளியேறினர்.
Also Read: சிகிச்சைக்கு லண்டன் செல்கிறார் ஷாஹின் அஃப்ரிடி: டி20 உலகக்கோப்பை ஆடுவது சந்தேகம்?
அது போன்ற சூழலில் பெரிய ஷாட்கள் தேவையே இல்லை. ரன் ரேட் 19 - 20 என தேவைப்பட்டிருந்தால் சிக்ஸர் அடிக்கலாம். ஆனால் குறைந்த ரன்ரேட்தான் தேவைப்பட்டது, அப்போது போய் இப்படி செய்திருக்க கூடாது. ஒருவேளை 70 - 80 ரன்களை அவர்கள் அடித்திருந்தால் சிக்ஸருக்கு சென்றிருக்கலாம். இனி வரும் போட்டிகளில் இதனை கற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Asia cup, Rohit sharma, Virat Kohli