Home /News /sports /

இந்தியா இறுதிக்கு எப்படி தகுதி பெறும்?- இலங்கை வெளியேறவும் வாய்ப்பு உள்ளது- எப்படி?

இந்தியா இறுதிக்கு எப்படி தகுதி பெறும்?- இலங்கை வெளியேறவும் வாய்ப்பு உள்ளது- எப்படி?

ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் 2 போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடைந்ததால் இறுதி வாய்ப்பு அருகி விட்டது, ஆனாலும் ஒரு அகாடமிக் ஆர்வத்துக்காக இந்திய அணியின் இறுதி வாய்ப்பு பற்றி ஒரு ஊகமாகவேனும் நாம் கணிக்க முடியும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் 2 போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடைந்ததால் இறுதி வாய்ப்பு அருகி விட்டது, ஆனாலும் ஒரு அகாடமிக் ஆர்வத்துக்காக இந்திய அணியின் இறுதி வாய்ப்பு பற்றி ஒரு ஊகமாகவேனும் நாம் கணிக்க முடியும். கணக்கீடுகளின் படி இலங்கை இறுதிக்கு முன்னேறியது போல் தெரிகிறது. ஆனால் அவர்களும் இங்கு போக முடியாததற்கான ஒரு துளி வாய்ப்பு உள்ளது. அதே போல் இந்தியாவுக்கும் ஒரு அரிதான வாய்ப்பு உள்ளது, எப்படி என்று பார்ப்போம்.

    ஆப்கானிஸ்தான்:  இன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது.  இந்தியாவுடன் ஒரு போட்டி மீதமுள்ளது. நெட் ரன் ரேட் 0.589. இந்நிலையில் இன்று பாகிஸ்தானிடம் ஆப்கான் தோற்றுவிட்டால் ஆப்கான், இந்தியாவுடன் வெளியேறி விடும். அதே வேளையில் பாகிஸ்தானை வென்று விட்டு இந்தியாவிடம் ஆப்கான் தோல்வி அடைந்தால். இலங்கை அணி பாகிஸ்தானை விழித்தினால் ஆப்கானிஸ்தானுக்கு வாய்ப்பு கிடைக்கும்.  ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான், இந்தியா இரண்டையும் வீழ்த்தி விட்டால், அதே வேளையில் இலங்கை பாகிஸ்தானை வீழ்த்தி விட்டால் ஆப்கான் இறுதிக்கு நிச்சயம் தகுதி பெற்று விடும்.

    ஆனால் இலங்கை பாகிஸ்தானிடம் தோற்றால் மூன்று அணிகளும் 2 வெற்றிகள் என்று சமன் வகித்தால் நெட் ரன் ரேட் தீர்மானிக்கும். இந்தியா: நிகர ரன் விகிதம் -0.125.  இந்திய அணிக்கு இன்னும் ஒரேயோரு போட்டிதான் உள்ளது, அது ஆப்கானிஸ்தானுடன். இந்தியா ஆப்கானை வீழ்த்தி, இலங்கை அடுத்த போட்டியிலும் வென்றால், ஒரு வெற்றியுடன் இருக்கும் 3 அணிகளில் நெட் ரன் ரேட் உள்ள அணி இறுதியில் இலங்கையை எதிர்கொள்ளும். இந்தியா தகுதி பெற பாகிஸ்தான் தன் 2 போட்டிகளிலும் தோல்வியுற வேண்டும்.

    இன்று பாகிஸ்தான் ஆப்கானை வீழ்த்தி விட்டால் இந்தியா, ஆப்கான் இரண்டுமே பெட்டியைத் தூக்க வேண்டியதுதான்.

    பாகிஸ்தான் அணி: மிகவும் சிம்பிள், இன்று ஆப்கானை வீழ்த்தி விட்டால் இந்தியா, ஆப்கான் இரண்டும் வெளியேறி விடும், மாறாக இன்று பாகிஸ்தான் தோல்வி அடைந்தால் வெள்ளிக்கிழமை இலங்கையை வீழ்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும். இந்தியா ஆப்கானை வீழ்த்தினாலும் பாகிஸ்தான் இறுதிக்குத் தகுதி பெறும்.

    இல்லையெனில் ஆப்கான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் வீழ்த்தி விட்டால் இலங்கையை பாகிஸ்தான் வீழ்த்தி நெட் ரன் ரேட்டில் மாட்டும். பாகிஸ்தான் மீதமுள்ள 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்தால், இந்தியா ஆப்கானை வீழ்த்தி விட்டால் 3 அணிகள் ஒரு வெற்றியுடன் நெட் ரன் ரேட்டில் மாட்டும்.  இலங்கை அணி: இப்போதைக்கு 4 புள்ளிகளுடன் இறுதி வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளது இலங்கை. ஆனால் பாகிஸ்தானுடன் இலங்கை தோற்றால், ஆப்கானிஸ்தான் அணி, இந்தியா, பாகிஸ்தான் இரண்டையுமே வென்று விட்டால், இலங்கை, ஆப்கான், பாகிஸ்தான் மூன்று அணிகளும் 2 புள்ளிகள் என்று சமநிலை வகிக்க நெட் ரன் ரேட் வரும்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Asia cup, India

    அடுத்த செய்தி