Home /News /sports /

ஆசியக் கோப்பையில் தினேஷ் கார்த்திக் லெவனில் இருக்க மாட்டார் - ஸ்ரீகாந்த்

ஆசியக் கோப்பையில் தினேஷ் கார்த்திக் லெவனில் இருக்க மாட்டார் - ஸ்ரீகாந்த்

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இருந்தாலும் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற மாட்டார், அவர் ஒரு ரிசர்வ் பேட்டராகவே இருப்பார் என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இருந்தாலும் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற மாட்டார், அவர் ஒரு ரிசர்வ் பேட்டராகவே இருப்பார் என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இது தொடர்பாக ஸ்ரீகாந்த் கூறும்போது, “ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, 8ம் நிலையில் என்னுடைய அணியில் ஷமி இருப்பார், ஆனால் அவர் அணியில் இப்போது இல்லை. எனவே 8ம் இடத்தில் செஹல் இருப்பார்.

    வேகப்பந்தில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், இப்போது தீபக் ஹூடாவை கூடுதல் ஆல்ரவுண்டராக சேர்ப்பார்கள். இதுதான் சிறந்த அணிச்சேர்க்கை. ஏனெனில் 3 ஸ்பின்னர்களை எடுத்தால் பிரச்சனை, 3 ஸ்பின்னர், 3 வேகப்பந்து நல்ல அணிச்சேர்க்கை அல்ல.

    தினேஷ் கார்த்திக் எனவே ஒரு ரிசர்வ் பேட்டர்தான், அவருக்கு அணியில், அதாவது ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்காது என்பதே என் அபிப்ராயம். எனக்கு அவர் ஆடுவதில் சந்தேகம் இருக்கிறது” என்றார்.

    ஆனால் ஸ்ரீகாந்தை மறுத்த முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே, நிச்சயம் தினேஷ் கார்த்திக் லெவனில் ஆட வைக்கப்பட முடியாது என்றால் அவரை தேர்வே செய்திருக்க மாட்டார்கள், எனவே அவரை லெவனில் ஆடவைக்கத்தான் தேர்வு செய்துள்ளார்கள் என்று ஸ்ரீகாந்துக்குப் பதில் கொடுத்தார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asia cup, Asia cup cricket, Dinesh Karthik, Krish Srikanth

    அடுத்த செய்தி