Home /News /sports /

Ind vs SL | இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு... இந்திய அணியில் முக்கிய மாற்றம்

Ind vs SL | இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு... இந்திய அணியில் முக்கிய மாற்றம்

india vs sri lanka

india vs sri lanka

ஆசிய கோப்பை தொடரின் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து இன்றைய போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - இலங்கை அணிகள் முதன்முறையாக மோதுகிறது.

    சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் உடனான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால் இன்றைய போட்டி மிகவும் முக்கியமானதாகும். இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரவிசந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெற்றுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஸ்னாய் அணியில் இடம்பெறவில்லை.

    இந்திய அணி : கேஎல் ராகுல், ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்
    Published by:Vijay R
    First published:

    Tags: Asia cup

    அடுத்த செய்தி