Home /News /sports /

2022-ல் அதிக ஆவரேஜ், ஸ்ட்ரைக் ரேட் சஞ்சு சாம்சன் தான் - தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், பண்ட் அல்ல

2022-ல் அதிக ஆவரேஜ், ஸ்ட்ரைக் ரேட் சஞ்சு சாம்சன் தான் - தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், பண்ட் அல்ல

சஞ்சு சாம்சன் நீக்கம்

சஞ்சு சாம்சன் நீக்கம்

ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் ஸ்டாண்ட் பை வீரராகக் கூட சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை, உண்மையில் இது மிகமிகப் பரிதாபம். அக்சர் படேல், மும்பை லாபி வீரர், வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சொதப்பும் ஸ்ரேயஸ் அய்யர், காயத்திலிருந்து மீண்டாரா இல்லையா என்பதே தெரியாத தீபக் சாஹர் ஆகியோர் ஸ்டாண்ட் பை வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் ஸ்டாண்ட் பை வீரராகக் கூட சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை, உண்மையில் இது மிகமிகப் பரிதாபம். அக்சர் படேல், மும்பை லாபி வீரர், வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சொதப்பும் ஸ்ரேயஸ் அய்யர், காயத்திலிருந்து மீண்டாரா இல்லையா என்பதே தெரியாத தீபக் சாஹர் ஆகியோர் ஸ்டாண்ட் பை வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

    சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்யாமல் ஒழித்தது ட்விட்டர் வாசிகளிடையே கடும் கோபத்தை அதிகரித்துள்ளது. கே.எல்.ராகுல் அறுவை சிகிச்சை, காயத்துடன் வந்துள்ளார், விராட் கோலி படுதண்டமான பார்மில் இருக்கிறார். ஒன்றுமே அவருக்கு ஆட வரவில்லை, ஆனால் இருவரையும் 2025 வரை சுற்றிவளைத்துள்ள கார்ப்பரேட் ஸ்பான்சர்களால் இடம்பெற்றுள்ளனர். சஞ்சு, குல்தீப் யாதவ், இஷான் கிஷன் அணியிலிருந்து புறமொதுக்கப்பட்டனர்.

    2022-ம் ஆண்டு டி20 சர்வதேசப் போட்டிகளில் விக்கெட் கீப்பர்களின் ஆட்டத்தை பார்த்தோமானால் சஞ்சு சாம்சன் 158.40 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 44.75 என்ற சராசரியில் ரன்களை எடுத்து முதலிடத்தில் இருக்கிறார்.

    இவருக்கு அடுத்துதான் இஷான் கிஷன் 130.40 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 30.71 என்ற சராசரியில் ஸ்கோரை எடுத்துள்ளார்.

    அடுத்த இடத்தில்தான் ரிஷப் பண்ட் 135.42 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெறும் 26 ஆவரேஜ். கடைசியாக தினேஷ் கார்த்திக் 133 ஸ்ட்ரைக் ரேட், ஆவரேஜ் 21. சிறப்பாக ஆடியது சஞ்சு சாம்சன் அடுத்து இஷான் கிஷன், ஆனால் அணியில் இருப்பது ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக். என்று ட்விட்டர் வாசிகள் கொதிப்படைந்துள்ளனர்.















    ஆசியக் கோப்பை இந்திய அணி வருமாறு:

    ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அஸ்வின், செஹல், பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான்.

    ஸ்டாண்ட் பை வீரர்கள்: அக்சர் படேல், ஷ்ரேயஸ் அய்யர், தீபக் சாஹர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Asia cup cricket, Dinesh Karthik, Rishabh pant, Sanju Samson, Team India

    அடுத்த செய்தி